Kalki 2898 AD: 6 நாட்களில் இவ்வளவு வசூலா.. 1000 கோடி கிளப்பை நோக்கி நடைபோடும் கல்கி 2898 AD படம்!

சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள கல்கி 2898 ஏடி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில கலவையான விமர்சனங்களையும் இந்தப்படம் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த 6 நாட்களில் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்று நடைபோட்டு வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. முதல் வாரத்தின் இறுதியிலேயே படம் 500 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது.

Prabhas Kamal haasan Amitabh bachan Kalki 2898 AD movie tamil cinema 2898 AD

கல்கி 2898 AD படம்: நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வெளியாகி உள்ள படம் கல்கி 2898 AD படம். இந்த படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது. படத்தில் வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசனின் லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தின் ஆணிவேராக நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். 80 வயதை கடந்த நிலையிலும் அவரது எனர்ஜி இந்த படத்தில் மிகச் சிறப்பாக காணப்படுகிறது.

6 நாட்கள் வசூல்: படத்தில் தீபிகா படுகோன் மிகவும் அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் 60 சதவிகித சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் எஞ்சிய 40 சதவீத ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டில் படக்குழுவினர் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் கடந்த ஆறு நாட்களில் 620 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி வசூலித்துள்ளது. முதல் வாரத்தின் இறுதியிலேயே படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டிய நிலையில் 6 நாட்களில் இந்த படம் 620 கோடி வசூலை தாண்டியுள்ளது,

1000 கோடி கிளப்: இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். படம் விரைவில் 1000 கோடி வசூலை எட்டிப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. துவக்கம் முதலே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை படக்குழுவினர் அதிகமாக செய்துவந்தனர். அடுத்தடுத்த அப்டேட்டுகளால் ரசிகர்களை கவர்ந்து வந்தனர். படத்தின் ட்ரயிலர் ரிலீஸ் உள்ளிட்ட பல விஷயங்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்து முடித்தனர். அடுத்தடுத்த பிரமோஷன்களால் கமல்ஹாசன், பிரபாஸ் உள்ளிட்டவர்கள், ரசிகர்களை திணற வைத்தனர். இந்த படத்தில் கமல்ஹாசனின் கேரக்டர் சில நிமிடங்களே வருகிறது. இது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

கமல்ஹாசன் அப்டேட்: இந்நிலையில் 2வது பாகத்தில் தான் தனக்கு அதிகமான வேலை உள்ளதாக கமல்ஹாசன் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதையடுத்து 2வது பாகத்தில் அவரது கேரக்டர் மிரட்டலாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் 2வது பாகத்திற்கான அடுத்தக்கட்ட சூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டு முதல் பாகம் போல இல்லாமல் அடுத்த ஆண்டிற்குள் இரண்டாவது பாகத்தை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X