Kalki 2898 AD: ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்த நாள் வந்துடுச்சு.. கல்கி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகர் பிரபாஸ், ராணா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் தொடர்ந்து அடுத்தடுத்த ரிலீஸ் தேதிகளை அறிவித்து வந்த சூழலில் விஎப்எக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்துள்ள சூழலில் அவரது கேரக்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக அவரது கேரக்டர் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி 2898 ஏடி படம்: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளது மிகப்பெரிய அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் அடுத்தடுத்து மாற்றங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது கல்கி. இந்தப் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாக் அஸ்வின் இயக்கம்: தெலுங்கில் மகாநடி உள்ளிட்ட படங்களை இயக்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி படத்தில் விஎப்எக்ஸ் பணிகள் அதிக கால தாமதத்தை ஏற்படுத்தியதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இதனிடையே கல்கி 2898 ஏடி படத்தின் அமிதாப் பச்சனின் கேரக்டரை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆனந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். இந்த கேரக்டரில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமிதாப் பச்சனை இளமையான தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய நிலையில் இன்று மாலை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சில நிமிடங்களே கமல்ஹாசன் நடித்துள்ளதாகவும் அதற்காக முன்னதாக 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்ததாகவும் சம்பளமாக 150 கோடி ரூபாய் பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய படங்களின் கேரக்டர்களுக்காக அதிகமாக மெனக்கெடும் கமல்ஹாசன், இந்தப் படத்தில் எந்த மாதிரியான எஃபர்ட்டை போட்டுள்ளார் என்பது குறித்து அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பிரம்மாண்ட தயாரிப்பு: வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் கல்கி 2898 ஏடி படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் சிறப்பாக நடந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமையை வாங்கியுள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் நிறுவனம் 150 கோடி ரூபாய்களுக்கு ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











