Kalki 2898 AD: கல்கி 2898 AD படத்தின் டீசர் குறித்த அப்டேட்.. பாக்கலாங்களா!
சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட்கேரக்டர்களில் நடித்துள்ள படம் கல்கி 2898 VD, நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சூட்டிங் தாமதமடைந்ததால் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.மே மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது.
முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டருடன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். 6000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த கதை மே மாதத்தில் மீண்டும் துவங்கவுள்ளதாக கமல்ஹாசனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கமல்ஹாசன் இந்தப் படத்தில் மிரட்டலான வில்லனாக களமிறங்கியுள்ளார். சில தினங்களே அவர் இந்தப் படத்திற்காக கால்ஷீட் கொடுத்த நிலையில் 150 கோடி அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரது போஸ்டரும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கல்கி 2898 AD படம்: நடிகர் பிரபாசின் நடிப்பில் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை மேற்கொண்டது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் கல்கி 2898 AD படம். இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபாசுடன் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோரும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார் கமல்ஹாசன்.
டைட்டில் அறிவிப்பு: படத்தின் முந்தைய போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் படம் மே மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பை கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். 6000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த கதை மீண்டும் மே மாதம் துவங்கவுள்ளதாக கமல் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளது கூடுதல் அட்ராக்ஷனாக பார்க்கப்படுகிறது. அவருக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்காக 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக எதிர்பார்ப்பில் படம்: இந்த ஆண்டில் வெளியாகவுள்ள படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள கல்கி 2898 AD படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். முன்னதாக நடிகையர் திலகம் படததை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருந்த இவர், தற்போது சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 2வது வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மார்ச் மாதத்தில் படத்தின் முதல் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிரம்மாண்ட தயாரிப்பு: முன்னதாக இந்தப் படத்திற்கு புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டிருந்தது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகிவரும் இந்தப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் சூட்டிங் ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், முன்னதாக வெளியான படத்தின் கிளிம்ப்ஸ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் நடிகர் பசுபதியும் காணப்பட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து படங்களின் டீசர் உள்ளிட்டவையும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications











