Project K: அமெரிக்காவில் நடக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வெளியீடு.. எப்ப தெரியுமா?
சென்னை: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ப்ராஜெக்ட் கே.
இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் கமிட்டாகியுள்ளார். அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் படத்தின் டைட்டில், டீசர் உள்ளிட்டவை இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளதாகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் நடக்கும் பிராஜெக்ட் கே படத்தின் டைட்டில் வெளியீடு: நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி என பான் இந்தியா நட்சத்திரங்கள் இணைந்துள்ள படம் ப்ராஜெக்ட் கே. சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இந்தப் படத்தை நாக் அஸ்வின் இயக்கிவருகிறார். இவர் முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான மகாநடி படத்தை இயக்கியவர். படத்தில் பிரபாஸிக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்தப் படத்தை தெலுங்கில் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படம் அடுத்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். அவருக்கு இந்தப் படத்திற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் படத்தில் இணைந்துள்ளது குறித்து தயாரிப்பு தரப்பு வீடியோ மூலம் உறுதி செய்தது.
இதையடுத்து இந்தப் படத்தில் நடிக்க தான் ஆர்வமாக காத்திருப்பதாக கமலும் அறிக்கைமூலம் தெரிவித்திருந்தார். எந்த விதத்தில் பார்த்தாலும் தான் திரைப்பட ரசிகன் என்பதே முதன்மையானது என்றும், அதனால் எந்தவித புது முயற்சிகளையும் தான் வரவேற்பதாக தெரிவித்திருந்த கமல், இந்தப் படத்திற்கான முதல் கைத்தட்டல் தன்னுடையது என்றும் விரைவில் இந்த கைத்தட்டல் சர்வதேச அளவில் எதிரெலிக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் ஜூலை 20ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. காமிக் கான் முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் அப்டேட் தெரிவித்துள்ளார். முதல் முறையாக இதுபோன்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
சான் டியாகோவில் நடைபெறவுள்ளஇந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன், இயக்குநர் நாக் அஸ்வின் ஆகியோர் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ப்ராஜெக்ட் கே படம். அந்த டைட்டிலிலேயே இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெறவுள்ளதும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











