Salaar: தள்ளிப்போகும் சலார் படத்தின் ரிலீஸ்.. டிசம்பரில் ரிலீஸ்?

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சலார். பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

கேஜிஎப் படங்களை தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்திற்கு சர்வதேச அளவில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் செப்டம்பர் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Prabhass Salaar movie release to be postponed to December?

டிசம்பர் மாதத்திற்கு தள்ளி போகிறதா சலார் பட ரிலீஸ்?: கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றவராக மாறியுள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். இந்தப் படங்கள் சர்வதேச அளவில் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இந்நிலையில் இவரது அடுத்தப்படம் குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்க சலார் படத்தை இயக்கி முடித்துள்ளார் பிரஷாந்த் நீல். இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. டார்க் சென்ட்ரிக் தீம் என்ற தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டீசர் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் பிரபாசுடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகவில்லை. இதனால் மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக தயாரிப்புத் தரப்பு ஹம்பாலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ட்ரெயிலர் வெளியீடு தாமதமானதால் படத்தின் ரிலீசும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சலார் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுகாககாக மிகுந்த ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Actor Prabhass Salaar movie release to be postponed to December?

விரைவில் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரபாஸ் கேங்ஸ்டராக நடித்துள்ளார். உயிர் நண்பனின் சாவிற்கு பழிதீர்க்கும் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பாகமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாகத்திற்கு சலார் :பார்ட் ஒன் சீஸ் ஃபயர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்று மீதமுள்ளதாகவும் இதில் நடிகை ஒருவர் ஆட இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரபாசிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இந்த சூட்டிங்கை எடுக்க முடியாத நிலையில்தான் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பூரணமாக குணமாகும்வரை காத்திருக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மேற்கொள்ளப்படும்வரை காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X