Salaar: அதுதான் பிரபாஸ்.. ஒரே ஒரு கை போஸ் தான்.. 10 மணிநேரத்தில் 30 மில்லியன் வியூஸை நெருங்கிய சலார்
சென்னை: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் டார்லிங் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள சலார் படத்தின் மிரட்டலான டீசர் இன்று காலை வெளியானது.
சலார் படம் கேஜிஎஃப் 2 படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றே சிக்னல்கள் தெரிகிறது. வெறும் பிரபாஸின் ஒரே ஒரு கை போஸை காட்டியே 10 மணி நேரத்தில் சுமார் 30 மில்லியன் வியூஸை குவித்து இமாலய சாதனையை இந்த படத்தின் டீசர் செய்து அசத்தி வருகிறது.

24 மணி நேரத்தில் எத்தனை ரெக்கார்டுகளை பிரேக் செய்யும் இந்த சலார் படத்தின் டீசர் என்றே தெரியவில்லை என பிரபாஸ் ரசிகர்கள் ஹைப்பை எகிற வைத்து வருகின்றனர்.
பிரசாந்த் நீல் யூனிவர்ஸ்: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வேறலெவல் வெறித்தனம் காட்டி ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தையே வசூலில் முந்தி ஒன்லீ பீஸ் என நிரூபித்தது.
இந்நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் பிரசாந்த் நீல் யூனிவர்ஸ் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தெறிக்கும் வியூஸ் சாதனை: 24 மணி நேரத்தில் 10 மில்லியன் வியூஸ் சாதனை எல்லாம் பழசுங்க வெறும் 10 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் சாதனை தான் புதுசுங்க என சலார் படம் மாஸ் காட்டி வருகிறது.
Most Liked Teasers In 24hrs:
— . (@SalaarRavi) July 6, 2023
1. #Salaar: 1.24M** (10hrs)🔥
2. #RRR (Ntr)- 960K
3. #Pushpa- 793K pic.twitter.com/SbFCvuwTWJ
செம ஃபிட்டான தோற்றத்தில் நடிகர் பிரபாஸின் ஆக்ஷன் காட்சிகள் டீசரில் நிறைந்துள்ள நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள டைனோசர் பில்டப் யூடியூபில் அந்த டீசரை ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக பார்த்து இதுவரை 28 மில்லியன் வியூஸை சலார் டீசர் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
75 மில்லியனை தாண்டும்: 10 மணி நேரத்தில் பிரபாஸின் சலார் டீசர் 28 மில்லியன் வியூஸை கடந்துள்ள நிலையில், 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 75 மில்லியனை இந்த டீசர் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ஸ்ரேயா ரெட்டி முக்கியமான ரோலில் நடித்துள்ளார். பிரபாஸுக்கு வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள நிலையில், ஜகபதி பாபுவும் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எகிறிய ஹைப்: நடிகர் பிரபாஸின் முகத்தைக் கூட காட்டாமல் வெறும் கையை மட்டுமே காட்டியே இத்தனை பெரிய ரெக்கார்டு இந்த டீசர் படைத்துள்ளது என்றால், படத்தின் டிரெய்லர் மற்றும் செப்டம்பர் 28ம் தேதி படம் ரிலீஸ் ஆனால், அதன் பாக்ஸ் ஆபிஸ் இந்திய சினிமாவின் உச்சமாக இருக்கும் என பிரபாஸ் ரசிகர்கள் ஹைப்பை எகிற வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











