பிரபாஸோட ஸ்பிரிட் பட பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?.. கல்கி படத்தைவிட அதிகம்!

சென்னை: நடிகர் பிரபாசின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்தாலும் அவருக்கு சில படங்கள் வசூல் ரீதியாக கைக்கொடுக்காத நிலையே இருந்தது. பாகுபலி படங்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கல்கி 2898 ஏடி படமே அவருக்கு வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்துள்ளது.

இதனிடையே அடுத்ததாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபாஸ். ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க சந்தீப் ரெட்டி வங்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அவரது இயக்கத்தில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய அளவில் கவனத்தையும் வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.

prabhas spirit sandeep reddy vanga

நடிகர் பிரபாஸ்: நடிகர் பிரபாஸ் பாகுபலி படங்களுக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் கவனம் ஈர்த்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கல்கி 2898 ஏடி படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படம் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், படம் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டி வசூலித்திருந்தது. படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபாஸ். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

ஸ்பிரிட் படம்: படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை சந்தீப் ரெட்டி வங்கா நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை குறிப்பாக வட இந்திய ரசிகர்களை கொண்டாட செய்த நிலையில், சந்தீப் ரெட்டியின் ஸ்பிரிட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை திரிஷா வில்லியாக இணைந்துள்ள நிலையில், படம் எப்படி அமையும் என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக பிரபாசிற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில், தற்போது அவர் வில்லியாகவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

prabhas spirit sandeep reddy vanga

500 கோடி பட்ஜெட்: இந்நிலையில் இந்தப் படத்தை அதிக பிரம்மாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சந்தீப் ரெட்டி வங்கா உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்ட பிரபாசின் கல்கி 2898 ஏடி படமே 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக தகவல்கள தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதையும் மீறி அதிக பட்ஜெட்டில் ஸ்பிரிட் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாறுமாறாக உயர்த்தியுள்ளது.

இரட்டை வேடங்களில் பிரபாஸ்: கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். டானாவும் போலீசாகவும் இரண்டு கேரக்டர்களில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக தன்னுடைய படங்களில் 1000 கோடி ரூபாலை பிரபாஸ் வாடிக்கையாக வைத்திருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன்கூறியிருந்த நிலையில், ஸ்பிரிட் படமும் 1500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் படமும் சர்வதேச அளவில் 900 கோடி ரூபாய் வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் கூட்டணி மேஜிக்கை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X