Prabhas: நீங்க இல்லாம நான் ஜீரோ.. கல்கி 2898 AD பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரபாஸ்!

சென்னை: நடிகர் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ள கல்கி 2898 AD படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் இரண்டு வாரங்களிலேயே படம் ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக சிறப்பான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட கல்கி படத்தின் வெற்றியை படக்குழுவினர் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ள நன்றி வீடியோவை வைஜெயந்தி மூவிஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Prabhas Kalki 2898 AD movie

கல்கி 2898 AD படம்: நடிகர் பிரபாஸ். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்ளிட்டவர்கள் நடிப்பு கடந்த மாதத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படம் இரு வாரங்களிலேயே மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டியுள்ளது. கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்ற போதிலும் திரையரங்குகளில் அதிகமான வரவேற்புடன் சிறப்பாக ஓடி வருகிறது. படத்தின் விஎப்எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிகளை வசூலித்து இந்த படம் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.

5 ஆண்டு உழைப்பு: படத்தின் மிகப்பெரிய பலமாக நடிகர் அமிதாப் பச்சன் அமைந்துள்ளார். பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோருக்கும் படத்தில் சிறப்பான கேரக்டர்கள் அமைந்துள்ளன. சயின்ஸ் பிக்ஷன் மற்றும் இதிகாச கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக இருந்த போதிலும் சில நிமிடங்களே அவரது கேரக்டர் இந்த படத்தில் அமைந்துள்ளது. இரண்டாவது பார்ட்டில் தான் தனக்கு வேலை அதிகம் என்று கமல்ஹாசனே தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த படத்திற்காக இயக்குனர் நாக் அஸ்வின் மிகப்பெரிய மெனக்கடலை கொடுத்துள்ளார்.

பிரபாஸ் நன்றி தெரிவித்து வீடியோ: கல்கி படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நாக் அஸ்வின், தேர்ந்தெடுத்த கவனத்துடன் செயல்படுத்தியுள்ளது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் பயன்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்த பாகம் 2026ம் ஆண்டில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் 1000 கோடி ரூபாய் வசூல் வெற்றியை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக படத்தின் நாயகன் பிரபாஸ் தன்னுடைய நன்றியை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை தற்போது தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ரசிகர்கள் இல்லாவிட்டால் ஜீரோ: இந்த வீடியோவில் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் அவரது 5 வருட உழைப்பை பிரபாஸ் பாராட்டி பேசியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு அவர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றிக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரபாஸ், ரசிகர்கள் இல்லாவிட்டால் தான் ஜீரோ என்று கூறியுள்ளார். இந்தப் படத்தின் பிரம்மாண்டத்திற்கு காரணமான தயாரிப்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மேலும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள குறித்தும் பிரபாஸ் உற்சாகம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் படத்தின் மேக்கிங் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X