மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபு.. என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார்?

சென்னை: இளைய திலகம் என்று அழைக்கப்படும் நடிகர் பிரபுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர். தற்போது குணசித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் சர்தகுமாருக்கு நண்பராக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபுவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு

பிரபுவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு

அவரது வீட்டில் இருந்த நடிகர் பிரபுவுக்கு இன்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோடம்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபுவுக்கு சிறுநீரக கற்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனால் உடனடியாக அவற்றை அகற்றவும் முடிவு செய்தனர்.

பிரபுவுக்கு செய்யப்பட்ட லேசர் அறுவை சிகிச்சை

பிரபுவுக்கு செய்யப்பட்ட லேசர் அறுவை சிகிச்சை

இதனையடுத்து அவருக்கு யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுநீரக கற்களை மருத்துவர்கள் அகற்றினர். இதனையடுத்து பிரபுவின் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்டிருக்கும் மருத்துவமனை, "நடிகர் பிரபு நலமுடன் இருக்கிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு நாள்களில் வீடு திரும்பிவிடுவார். அபாயகரமான நிலையில் அவர் இல்லை" என குறிப்பிட்டுள்ளது. இதனால் பிரபுவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

இளைய திலகம் பிரபு

இளைய திலகம் பிரபு

இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு ஆவார். 1982ல் லாட்டரி டிக்கெட் படம் மூலம் பிரபு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்து நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் அவரும், குஷ்பூவும் நடித்த சின்னத்தம்பி படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் பிரபுவின் மழலைத்தனமான நடிப்பு இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. அதேபோல் ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

ரஜினி, கமலுக்கு நெருக்கமானவர் பிரபு

ரஜினி, கமலுக்கு நெருக்கமானவர் பிரபு

சினிமாவில் கதாநாயகனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர் பிரபு. ரஜினியுடன் 80களில் நடித்ததற்கு பிறகு மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். அதிலும் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதேபோல் கமல் ஹாசனுடன் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து அதகளம் செய்திருப்பார். சமீபத்தில் வாரிசு படத்தில் சரத்குமாருக்கு நண்பராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X