மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைந்த பிரபு.. மகன் விக்ரம் பிரபுவுக்கும் கிடைத்தது வாய்ப்பு!
சென்னை: நடிகர் திலகம் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு முதன்முறையாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவரது திரைப்படங்கள் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பும் அவரது திரைப்படம் வெளியானதும் மிகுந்த வரவேற்பும் கிடைப்பது வழக்கம்.

மணிரத்னத்தின் படைப்புகள் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்யும் அளவிற்கு இருக்கும்.
இவரின் படங்களை அதிகம் விரும்புவது காதலிப்பவர்கள் தான். மணிரத்னம் தன் படங்களில் வரும் காட்சிகளை வைத்து மக்களை அதிகம் இவரது படைப்புகளைப் விரும்ப செய்தார். தான் இயக்கிய அனைத்து படங்களிலும் தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் மணிரத்னம்.
தற்போது உள்ள தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் ரஜினி கமலின் மெகா ஹிட் படங்களான தளபதி மற்றும் நாயகன் ஆகிய படங்களை இயக்கியவர்.
மணிரத்னம் தனது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
இதில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். அதிலும் முக்கியமாக தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் இளைய திலகம் பிரபு மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
சிவாஜி மற்றும் பிரபு இணைந்து சங்கிலி, வம்ச விளக்கு, தராசு, வெள்ளை ரோஜா என பல படங்களில் நடித்துள்ளனர்.
விளம்பர படங்களில் அப்பா பிரபுவுடன் நடித்து வந்த விக்ரம் பிரபு முதன்முறையாக அப்பா பிரபுவுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகர் பிரபு நடித்துள்ளார். மணிரத்னம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள வானம் கொட்டட்டும் படத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
சிவாஜி மற்றும் பிரபு இணைந்து நடித்த பல படங்கள் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதை வென்றுள்ளன. தற்போது இந்த அப்பா - மகன் கூட்டணியும் ரசிகர்களை திருப்தி படுத்துமா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











