Actor Dhanush: ராயன் படத்தில் பிரபுதேவாவா.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து கடந்த மாதத்தில் அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய இயக்கத்தில் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என இரு படங்களை இயக்கியுள்ளார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தின் ஷூட்டிங்கில் தற்போது இணைந்து நடித்து வருகிறார்.

மும்பையை கதைக்களமாக கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்திற்கு தாராவி என்று பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் தனுஷுடன் நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தில் தனுஷிற்கு வில்லனாக நடித்து வருகிறார் நாகார்ஜூனா. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் டைரக்ஷனில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார் தனுஷ்.

Actor Prabhu deva Choreographed Dhanushs Raayan movie for one song

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக தொடர்ந்து பல ஆண்டுகள் நடித்து வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இவரது பயணம் தொடர்ந்து வருகிறது. தன்னுடைய நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் ஏராளமான ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி 100 கோடி கிளப்பில் இணைந்தன. இதனிடையே கடந்த மாதத்தில் பொங்கலையொட்டி அவரது கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறி உள்ளது,

தனுஷ் இயக்கத்தில் படங்கள்: இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்காமல், அடுத்தடுத்து தன்னுடைய இரு படங்களை இயக்கி முடித்துள்ளார். இதில் அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள D50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல அவரது தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் சூட்டிங் இன்னும் 30 சதவிகிதம் மீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் இளைஞர்களை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார் தனுஷ். ராயன் படத்தில் தனுஷ் சமையல்காரராக நடித்து வருவதாகவும் அவரது பிளாஷ்பேக்கில் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதுதான் படத்தின் கதை என்றும் கூறப்பட்டுள்ளது.

Actor Prabhu deva Choreographed Dhanushs Raayan movie for one song

ராயன் படத்தில் பிரபுதேவா: இதை வெளிப்படுத்தும் வகையில்தான் சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் காணப்பட்டது. படத்தில் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளனர். வடசென்னையை மையமாக கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் ராயனாக நடித்துள்ளார் தனுஷ். படத்தில் தனுஷின் அண்ணனும் பிரபல இயக்குநருமான செல்வராகவனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டப்பிங் பணிகள் விறுவிறு: தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே தன்னுடைய D51 படத்திற்காக இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் சூட்டிங் மும்பை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தப்படமும் கேங்ஸ்டர் கதைகளத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தாராவி என்று பெயரிடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் தனுஷ், நாகார்ஜூனா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X