Prabhu deva: 50 வயசுல எனக்கு பெண் குழந்தை.. வாழ்க்கையே மாறிடுச்சு.. உணர்ச்சிவசப்பட்ட நடனப்புயல்!

சென்னை: நடன இயக்குநராக தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கியவர் பிரபுதேவா. பிரபல நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா வெற்றிவிழா படத்தில் தன்னுடைய முதல் நடனத்தை செய்திருந்தார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக செயலாற்றி சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

நடன இயக்குநராக இருந்த இவர் ரோஜாவுடன் இணைந்து இந்து என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோவாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்துவந்த இவர் ஒரு கட்டத்தில் விஜய்யின் போக்கிரி படத்தின்மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைய அடுத்தடுத்த படங்களை இயக்கியுள்ளார்.

prabhu deva tamil cinema

நடிகர் பிரபுதேவா: நடிகர் பிரபுதேவா பிரபல நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டரின் மகனாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். வெற்றி விழா உள்ளிட்ட படங்களில் செயலாற்றிய இவர், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் ஆட்டம் போட்டுள்ளார். வேகமாக நடனமாடி இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். பல படங்களில் தனி பாடல்களுக்கு ஆட்டம் போட்டாலும் ஜென்டில்மேன் படத்தில் கௌதமியுடன் இவர் ஆட்டம் போட்ட சிக்கு புக்கு ரயிலே பாடல் பட்டிதொட்டியெங்கும் இளைஞர்களை ஆட்டம் போட வைத்தது. இந்தப் பாடல் நடிகர் சூர்யாவிற்கு மிகவும் பிடித்தமானது என்றும் இந்தப்பாடலில் கௌதமியின் மிகப்பெரிய ஃபேனாக மாறியதாகவும் சமீபத்தில் நடிகர் கார்த்தி கூறியிருந்தார்.

அடுத்தடுத்த தளங்கள்: இந்தப் பாடலை தொடர்ந்து ஹீரோவாகும் வாய்ப்பும் பிரபுதேவாவிற்கு கிடைத்தது. ரோஜாவுடன் இணைந்து இந்து படத்தில் நடித்திருந்தார் பிரபுதேவா. கடந்த 1989ம் ஆண்டில் வெளியான இந்தப்படமே பிரபுதேவா ஹீரோவாக நடித்த முதல் படம். இதையடுத்து காதலன் உள்ளிட்ட பல படங்கள் பிரபுதேவாவை மிகச்சிறப்பான ஹீரோவாக ரசிகர்களிடையே வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் இயக்குநராகவும் தன்னை மாஸாக வெளிப்படுததினார் பிரபுதேவா. விஜய்யின் போக்கிரி படத்தின்மூலம் இயக்குநராக அவதாரம் எடுதத இவர், தொடர்ந்து அவரது நடிப்பிலேயே வில்லு படத்தையும் இயக்கினார். தொடர்ந்து இந்திப் படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரபுதேவாவின் மகள்: முன்னதாக ரமலத் என்பவரை காதல் திருமணம்செய்துக் கொண்ட பிரபுதேவாவிற்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். நயன்தாராவுடன் சேர்ந்து பிரபுதேவா கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இவர்களது நட்பும் ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஹிமானியை கடந்த 2020ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார் பிரபுதேவா. இவருக்கு கடந்த ஆண்டில் பெண்குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு ஒன்றரை வயதாவதாக தற்போது பிரபுதேவா கூறியுள்ளார். தன்னுடைய மகளுக்கு சியா என தான் யோசித்து பெயர் வைத்ததாகவும் பிரபுதேவா உற்சாகம் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா நெகிழ்ச்சி: தனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதை தற்போதுவரை நம்ப முடியவில்லை என்றும் பிரபுதேவா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 50 வயதில் தனக்கு பெண் குழந்தை இருப்பது மிகவும் புதிதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வயதை 25ஆக உணரும்படி தன்னுடைய குழந்தை தன்னை மாற்றியுள்ளதாகவும் சிலிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னிடம் தன்னுடைய குழந்தை குதித்து குதித்து ஓடிவருவதும் புதிதாக இருப்பதாகவும் அவர் உற்சாகம் தெரிவித்துள்ளார். பிரபுதேவாவின் அப்பாவிற்கு 3 பேருமே மகன்கள் என்ற வகையில் அவர்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண்குழந்தை சியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X