தமிழ் திரையுலகுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு… பிரபு கண்ணீர் மல்க இரங்கல் !
சென்னை : விவேக்கின் மரணச்செய்தியைக் கேட்டு நடிகர் பிரபு கண்ணீல் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
அவரது உடலுக்கு பொதுமக்கள் , ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடிகர்களுடன்
தமிழ் சினிமாவில்முன்னணி நகைச்சுவைநடிகராக திகழ்ந்தவர்நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள்முதல் இளம் நடிகர்கள்வரை அத்தனை பேருடனும்இணைந்து நடித்துள்ளார்.

காலமானார்
நேற்று மாரடைப்பால்பாதிக்கப்பட்டவிவேக் சென்னையிலுள்ளதனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் 24 மணி நேரம் கழித்தே, அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என மருத்துவமனை தரப்பில், நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார்.

நம்மை விட்டு போய்விட்டார்
இந்நிலையில் நடிகர் பிரபு வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், தம்பி விவேக் நம்மை எல்லாம் விட்டு போய்விட்டாரு, அருமையான கலைஞர், அருமையான நண்பர், நல்ல ஒரு தம்பி விவேக். அவரை பிரிந்து எங்களாலேயே இருக்க முடியல அவரது குடும்பத்தினர் எப்படி இவரது இழப்பை தாங்க போறாங்கனு தெரியவே இல்லை. விவேக் ஒரு சமூக சிந்தனையாளர் அவருடன் சிரித்த நாட்கள் எல்லாம் அப்படியே நினைவில் வந்து போகுது.
தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பு
எத்தனை படங்கள் அவர் என்கூட நடிச்சாரு என்பதைவிட அவர் கூட நான் நடிச்சேன் என்பதுதான் எனக்கு பெருமையா இருக்கு. விவேக்கை நம எல்லாரும் ரொம்ப மிஸ் பண்ணப்போறோம். கோடிக்காண ரசிகர்களில் நானும் உன்னுடைய மிகப்பெரிய ரசிகன். இங்கிலீஸ் பேசுனாலும் தான் தமிழன்டா என்று நீங்க பேசுன டையலாக் எனக்கு ரொம்ப பிடிச்சது. நீங்க தமிழன் அருமையான தமிழன், தமிழ் திரையுலகுக்கு உங்களது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கண்ணீர் மல்க பேசினார்.


Click it and Unblock the Notifications











