அண்ணனுக்கு உதவ முடியாது.. 150 கோடி சொத்து.. ராம்குமாரை பற்றி ஓப்பனாக பேசிய பிரபு
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை நீக்க கோரி பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அண்ணன் ராம்குமார் வாங்கிய கடன திரும்ப செலுத்த என்னால் உதவ முடியாது என நடிகர் பிரபு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூட பிறந்த சகோதரரை பிரபு மறந்துவிட்டார் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். இதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வட்டி கூடி ரூ.9.39 கோடி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல், துஷ்யந்த் தயாரிப்பில் உருவான ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டது.

அன்னை இல்லம் ஜப்தி: உத்தரவின்படி அனைத்து உரிமைகளையும் துஷ்யந்த் வழங்கவில்லை. மேலும் மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதனைத்தொடர்நுத நீதிமன்றமும் ரூ.9 .39 கோடி கடனுக்காக சிவாஜி கணேசனின் இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. மேலும், திரை பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழ் சினிமாவில் பழம்பெருமையான வீடுகளில் ஒன்றாக அன்னை இல்லம் இருக்கிறது. இதில் சிவாஜி நடித்த பல படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று விஜய் நடித்த தெறி படத்தின் சில காட்சிகள் இங்கு படப்பிடிப்பு நடந்திருக்கிறது. மேலும் சிவாஜி கணேசன் உழைத்து வாங்கிய வீட்டை அவரது பிள்ளைகள் அடமானம் வைத்துவிட்டதாகவும் பேச்சு அடிபட்டது.

150 கோடி சொத்து: அன்னை இல்லத்தை ஜப்தி செய்வதை எதிர்த்து பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அன்னை இல்லம் விவகாரத்தில் மூன்றாம் நபரான இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை நீக்க வேண்டும் என பிரபு சார்பில் வாதம் வைக்கப்பட்டது. பிறகு, இதுவரை நான் யாரிடமும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. தனது அண்ணன் வாங்கிய ரூ.3 கோடி சொத்துக்காக 150 கோடி மதிப்புள்ள சொத்தை முடக்க உத்தரவிட்டது நியாயமற்றது எனவும் வாதிட்டுள்ளனர்.
அண்ணனுக்கு உதவ முடியாது: ராம்குமார் உங்கள் சகோதரர், நீங்கள் இந்த கடனை அடைத்து விட்டு, பிறகு உங்கள் அண்ணனிடம் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி பிரபுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து, எனது அண்ணன் ராம்குமார் இதுபாேன்று பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால, என்னால் உதவ முடியாது என பிரபு தெரிவித்திருக்கிறார். இது அவரது குடும்பத்திற்குள் விரிசலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை அண்ணன், தம்பி இருவரும் கூட்டுக்குடும்பாக ஒரே வீட்டிற்குள் வாழ்ந்து வருகின்றனர். பண பிரச்னையால் பிரிந்துவிட்டனரோ என்றும் பேச்சு அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications