லெஜண்ட் அண்ணாச்சியின் இன்னொரு முகம் தெரியுமா?.. நல்ல மனுஷனா இருக்காரேப்பா

சென்னை: லெஜண்ட் சரவணன் குறித்து நடிகர் பிரபு பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

துணிக்கடைகளில் மிகப்பெரிய சாம்ராஜ்யம் செலுத்துவது தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ். தற்போது அதன் உரிமையாளராக லெஜண்ட் அருள் சரவணன் இருக்கிறார். தனது கடையை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் தோன்றினார். அவருடன் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் நடித்தனர்.

தி லெஜண்ட் திரைப்படம்

தி லெஜண்ட் திரைப்படம்

இதனையடுத்து தி லெஜண்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார் லெஜண்ட் அருள் சரவணன். இந்தப் படத்தை இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கியிருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். விவேக், பிரபு, நாசர் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

லெஜண்ட்டை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்

லெஜண்ட்டை ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்


படத்துக்கு தோல்வியை கொடுத்த ரசிகர்கள் அருள் சரவணனையும் கடுமையாக ட்ரோல் செய்தனர். அவரது படத்தில் நடித்திருக்கும் காட்சிகளை பகிர்ந்தும் கிண்டல் செய்துவந்தனர். அதேசமயம் நடிப்பதற்கு யார் வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது. லெஜண்ட் அண்ணாச்சி விஷயத்தில் நெட்டிசன்கள் கொஞ்சம் ஓவராகவே போகின்றனர் என ஒரு தரப்பினர் தங்களது கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

புதிய லுக்கில் அண்ணாச்சி சரவணன்

புதிய லுக்கில் அண்ணாச்சி சரவணன்

நெட்டிசன்களின் ட்ரோல்களை எல்லாம் கண்டுகொள்ளாத லெஜண்ட் சரவணன் அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் காஷ்மீரில் இருந்தபடி பகிர்ந்திருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ படத்தில் லெஜண்ட் நடிக்கிறாரா எனவும் ரசிகர்கள் பேசினர். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை விரைவில் லெஜண்ட்டின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் மஞ்சள் நிற கோட்டில் ஸ்டைலாக கூலர்ஸில் இருந்த சரவணனின் லுக்கும் வைரலானது.

லெஜண்ட் சரவணனின் இன்னொரு முகம்

லெஜண்ட் சரவணனின் இன்னொரு முகம்

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் குறித்து நடிகர் பிரபு பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. லெஜண்ட் பட நிகழ்ச்சியில் பேசிய பிரபு, "விவேக் இப்போது உயிரோடு இருந்திருந்தால் இந்த மேடையில் நின்றிருப்பார். விவேக்குடன் 9லிருந்து 10 நாள்கள்தான் சரவணன் பழகியிருப்பார்.

அந்த சமயத்தில் விவேக் இறந்துவிட அவரது இறுதிச்சடங்கு அனைத்தையும் சரவணனே பார்த்துக்கொண்டார். அந்த அளவுக்கு நல்ல மனிதர் இவர்" என புகழ்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லெஜண்ட் அண்ணாச்சிக்கு இப்படி ஒரு நல்ல குணமா என சிலாகித்துவருகின்றனர்.

ஜனங்களின் கலைஞன் விவேக்

ஜனங்களின் கலைஞன் விவேக்

ஜனங்களின் கலைஞன், சின்னக்கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். நூறு படங்களுக்கும் மேல் நடித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடைசியாக நடித்த படம் தி லெஜண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X