வேலைக்காரனா நுழைஞ்சு தர்பார் நடத்திட்டு இருக்காரு.. ரஜினி படங்களை வைத்தே வாழ்த்திய பிரபு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரது படங்களின் பெயர்களை கொண்டே அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்துக்களை இளைய திலகம் பிரபு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இன்று பலரது டிபிக்களும் ரஜினியின் முகங்களாக நிறைந்துள்ள நிலையில், ரஜினிக்கு இப்படியொரு பிறந்த நாள் வாழ்த்தை கூறியுள்ள பிரபுவின் வீடியோவும் கூடவே வைரலாகி வருகிறது.

பிரபு வாழ்த்து

வணக்கம், திரையுலகம் என்கிற மாபெரும் கோட்டைக்குள் ஒரு சாதாரண வேலைக்காரனா நுழைஞ்சு, மாவீரனா மாறி, தளபதியா உயர்ந்து, மன்னனாகி இன்னைக்கு தமிழ் திரையுலகத்தையே தன்னுடைய பேட்டையா மாத்தி தர்பர் நடத்திக்கிட்டு இருக்கிற என்னுடைய அருமை அண்ணன் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து என ரஜினியின் திரைப்படங்களின் பெயர்களை கொண்டே அட்டகாசமாக நடிகர் பிரபு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சிவாஜியும் ரஜினியும்

சிவாஜியும் ரஜினியும்

மேலும், சிவாஜி அப்பாவும் அண்ணன் ரஜினியும் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி புகழ்ந்து கொள்வார்கள் என்றும், சிவாஜி அப்பா பல படங்களில் ரஜினியோடு நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்தால், ரஜினி கண்களில் ஒரு ஃபயர் இருக்கிறது. மக்களை கவரும் காந்தம் இருக்கிறது என்றே சொல்வார் என சிலாகித்து பிரபு கூறியுள்ளார்.

சூப்பர்ஸ்டார் இல்லை

சூப்பர்ஸ்டார் இல்லை

ரஜினி அண்ணனை பற்றி புகழ்ந்து பேச நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா ரஜினி அண்ணன் புகழ்ச்சிக்கு மயங்குபவர் இல்லை. நீங்க சூப்பர்ஸ்டார் என்றால், ஆளவிடுங்கப்பா நான் சாதாரண ஆள் என கூறும் எளிமை தான் அவரின் சிறப்பும் என்றும் அந்த வீடியோவில் பிரபு புகழ்ந்துள்ளார்.

பேசினாலும் நியூஸ்.. பேசாட்டியும் நியூஸ்

பேசினாலும் நியூஸ்.. பேசாட்டியும் நியூஸ்

ரஜினி அண்ணன் சினிமாவில் ஒரு பஞ்ச் வசனம் பேசினால், அது தான் அன்னைக்கு ஹாட் டாபிக். அண்ணன் எது பேசினாலும் அது நியூஸ், பேசாம இருந்தாலும் அதுவும் நியூஸ் என்று கூறிய இளைய திலகம் பிரபு, ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X