பிரபுவை சுற்றி வந்த 5 இளம் நடிகைகள்... கடைசியில் என்ன ஆச்சுன்னு தெரியுமா?
சென்னை: 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இளைய திலகம் பிரபு.
மறைந்த நடிகர் சிவாஜியின் மகனான பிரபு சங்கிலி என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
90களில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற டாப் ஹீரோக்களுடன் பிரபுவின் படங்களுக்கும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது.
இந்நிலையில், பிரபு உச்சத்தில் இருந்த நேரம், அவருடன் காதலில் இருந்ததாக 5 நடிகைகளின் பெயர்கள் அதிகம் அடிப்பட்டன.

சின்ன தம்பி ஜோடி
பிரபுவின் கேரியரில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது சின்ன தம்பி படம் தான். பி வாசு இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சில்வர் ஜுப்ளி கொண்டாடியது. பிரபு - குஷ்பூ இருவரது கெமிஸ்ட்ரியும் பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. இந்தப் படம் மட்டும் இல்லாமல் வெற்றி விழா, கிழக்குக்கரை, பாண்டித்துரை, மறவன், உத்தமராசா, தர்மசீலன் போன்ற மேலும் பல படங்களில் நடித்துள்ளனர். அப்போதெல்லாம் இருவருக்கும் இடையே காதல் என்றும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இது திடீரென ட்ராப் ஆனது.

முதல் பட நாயகி
பிரபு 1982ம் ஆண்டு வெளியான சங்கிலி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சிவி ராஜேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியா தான் பிரபுவின் ஜோடியாக நடித்திருந்தார். அப்போது முதலே இருவரும் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், மேலும் சில படங்களிலும் ஜோடியாக நடித்த பிரபுவும் ஸ்ரீப்ரியாவும், நிஜ வாழ்க்கையில் சேர முடியாமல் பிரிந்துவிட்டனராம்.

பிரபுவும் அம்பிகாவும்
இந்த வரிசையில் நடிகை அம்பிகாவும் பிரபுவின் காதல் பட்டியலில் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் தராசு, அண்ணாநகர் முதல் தெரு, என் உயிர் நீதானே, வெள்ளை ரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். அப்போது இவர்கள் காதலித்துள்ளனர். ஆனால், பிரபுவின் தந்தை சிவாஜியுடனும் அம்பிகா ஜோடியாக நடித்துள்ளதால், இதுவும் கை கூடாமல் போய்விட்டதாம்.

பிரபுவும் ரேவதியும்
அதேபோல், பிரபுவுக்கும் ரேவதிக்கும் இடையே காதல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அஞ்சலி, அரங்கேற்ற வேளை, ராஜா கைய வச்சா, கன்னி ராசி, உத்தம புருசன் போன்ற படங்களில் பிரபு - ரேவதி ஜோடி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. அப்போது இருவரும் காதலித்ததாகவும் பின்னர் பிரிந்துவிட்டதாகவும் அன்றைய தினங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

கண்ணழகி கனகா
இந்த வரிசையில், பிரபுவை காதலித்த நடிகையாக கனகாவும் இடம்பிடித்துள்ளார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். பிரபுவுடன் ஜல்லிக்கட்டு காளை, தாலாட்டு கேக்குதம்மா, கும்பக்கரை தங்கையா, பெரிய குடும்பம் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அப்போது இவர்கள் காதலித்ததாகவும், ஆனால், அதன்பின்னர் பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேருமே இளம் நடிகைகளாக இருந்த போதே பிரபு மீது காதலில் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











