மருத்துவரை ரகசியமாக 2வது திருமணம் செய்த நடிகர்? திருப்பதியில் சாமி தரிசனம்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகர் பிரபுதேவா பெண் மருத்துவர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்ததாக தகவல் பரவி வருகிறது.

சினிமா உலகில் நடன இயக்குநராக அறிமுகமானவர் பிரபு தேவா. பின்னர் 1994ஆம் ஆண்டு சரத்குமார் - ரோஜா நடிப்பில் வெளியான இந்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.

பின்னர் அதே ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் பிரபு தேவா.

பிரபுதேவா படங்கள்

பிரபுதேவா படங்கள்

ராசய்யா, லவ் பர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, விஐபி, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, நினைவிருக்கும் வரை, டைம், ஏழையின் சிரிப்பில், ஜேம்ஸ்பாண்டு, பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, மனதை திருடி விட்டாய், சார்ளி சாப்லின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநரான பிரபு தேவா

இயக்குநரான பிரபு தேவா

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கடைசியாக அவரது நடிப்பில் தேவி 2 படம் வெளியானது. தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகராக உள்ளார் நடிகர் பிரபு தேவா. நடன இயக்குநர் மற்றும் நடிகராக மட்டுமின்றி சினிமா இயக்குநராகவும் வலம் வருகிறார் பிரபு தேவா.

பல்வேறு விருதுகள்

பல்வேறு விருதுகள்

தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் பிரபு தேவா, தமிழில் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படத்தின் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து இயக்குநர் நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என வலம் வரும் நடிகர் பிரபு தேவா, நடனர் இயக்குநருக்காக இரண்டு முறை தேசிய விருதுகளையும் பிலிம் ஃபேர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

நயன்தாராவுடன் காதல்

நயன்தாராவுடன் காதல்

நடிகர் பிரபு தேவா 1995ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கடந்த 2008ஆம் ஆண்டு தனது 13 வயரிதல் புற்றுநோயால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் காதல் உறவில் இருந்து வந்தார் நடிகர் நயன்தாரா.

மனைவி விவாகரத்து

மனைவி விவாகரத்து

அதனை எதிர்த்து அவரது மனைவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2011ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் பிரபு தேவா. பின்னர் நயன்தாராவும் பிரபு தேவாவும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. பிரபு தேவாவுக்காக நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலகும் முடிவில் இருந்தார்.

பிரபு தோவாவை பிரிந்த நயன்

பிரபு தோவாவை பிரிந்த நயன்

ஆனால் பிரவு தேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டால் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார் ரம்லத். மேலும் பல்வேறு மகளிர் அமைப்புகளும் நயன்தாராவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. இதனை தொடர்ந்து நயன்தாராவும் பிரபு தேவாவும் பிரிந்தனர்.

திருப்பதியில் தரிசனம்

திருப்பதியில் தரிசனம்

இதனை தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார் நடிகர் பிரபு தேவா. இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஒரு பெண்ணுடன் சமீபத்தில் திருப்பதிக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

மருத்துவர் ஹிமானி

மருத்துவர் ஹிமானி

கடந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் பிரபு தேவா, ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இருக்கும் பெண் அவரது இரண்டாவது மனைவிதான் என்றும் கூறப்படுகிறது. அவர் ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்றும், பரிசோதனை செய்யப்போன போது அவருடன் நட்பு ஏற்பட்டு இந்தத் திருமணம் நடந்ததாகத் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X