Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியான படம் கில்லி. தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்து. 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது.
படத்தில் ஆக்ஷன், காமெடி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக சேர்க்கப்பட்டிருந்தன. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்தது படத்தின் பாடல்கள்தான். வித்யாசாகர் இசையில் படத்தின் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர். அப்படி போடு பாடல் எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் ரசிகர்களை கட்டிப் போட்டது.

விஜய்யின் கில்லி படம்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து சாதாரணமான 600 கோடி ரூபாய் வசூலையும் குவித்து வருகிறது. ஆனால் அவரது நடிப்பில் தமிழில் முதன்முதலில் 50 கோடி ரூபாய் வசூலித்தப் படமாக கில்லி தற்போதும் மாஸ் காட்டி வருகிறது. விஜய் -திரிஷா ஜோடி இந்தப் படத்தில் மிகச்சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தியது. படத்தில் விஜய்க்கு சமமாக பாடல்களில் ஆட்டம் போட்டிருந்தார் திரிஷா. அப்படி போடு பாடல் மிகப்பெரிய கொண்டாட்டத்தை அந்த கால கட்டத்திலேயே கொடுத்தது. திரிஷாவின் அறிமுகப் பாடலும் சிறப்பாக அமைந்தது.
கில்லி ரீ ரிலீஸ்: இந்நிலையில் தற்போது இந்தப் படம் 20 ஆண்டுகளை கடந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ள நிலையில், முதல் நாளிலேயே படத்தின் வசூல் பல கோடிகளை தாண்டும் என்று தயாரிப்புத்தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படமான கில்லி படத்தின் ரீ ரிலீசை பிரபலங்களும் திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் திரையரங்கில் சென்று FDFSவை என்ஜாய் செய்துள்ளார்.

கில்லி FDFS பார்த்த பிரதீப்: படத்தின் வீடியோவையும் தான் என்ஜாய் செய்யும் வீடியோவையும் இணைத்து அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய்யை மாஸாக காட்டிய படம் கில்லி. இந்தப் படத்தில் விஜய் -திரிஷா ஜோடி, பிரகாஷ்ராஜின் சிறப்பான வில்லத்தனம், வில்லத்தனம் காட்டினாலும் தனலட்சுமி மீதான அவரது காதல், விஜய்யின் கபடி ஆட்டம், அவரது நட்பு, காதல், அண்ணன் -தங்கை சென்டிமெண்ட் உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக கையாளப்பட்டிருந்தன. தெலுங்கில் ஒக்கடு படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி இருந்தபோதிலும் படத்தில் மிகச்சிறப்பான பல விஷயங்களை சேர்த்திருந்தார் இயக்குநர் தரணி.
மகேஷ்பாபு பாராட்டு: தெலுங்கில் இந்தப் படத்தில் நடித்திருந்த மகேஷ்பாபுவே பின்பு ஒரு பேட்டியில், விஜய் இந்தப் படத்தை மிகச்சிறப்பாக மாற்றியிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் துறுதுறுவென இருக்கும் விஜய்யை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள். இயல்பில் அவர் அப்படி இல்லை என்றாலும், இந்தப் படத்தில் அவரது வேலு கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்தது.


Click it and Unblock the Notifications











