Vignesh Shivan: டேட்ஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்.. ப்ரமோ வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப்படத்தின் அறிவிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தாமல் இருந்தார்.

நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் இணையவுள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது இந்தப் படம் குறித்த ப்ரமோ வீடியோவை பிரதீப்புடன் இணைந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

Actor Pradeep Ranganathan gave dates to Director Vignesh Shivan and the promo video released

விக்னேஷ் சிவனுக்கு டேட்ஸ் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்: இயக்குநர் விக்னேஷ் சிவன், போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில், நடிகர் அஜித்தின் ஏகே62 படத்தினை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டவர்கள் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அவரது ஸ்கிரிப்டில் தயாரிப்பு தரப்பிற்கு ஒப்புதல் இல்லை என இதற்கு காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் படத்தை அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாகவும் த்ரிஷா இந்தப் படத்தில் ஜோடியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி தற்போது அஜித் வெளிநாட்டில் உள்ளார். படத்தின் சூட்டிங் வெளிநாட்டில்தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் படமியக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்தப் படம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் அறிவிப்பை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரமோ வீடியோவுடன் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். எப்போதுமே தன்னுடைய படங்களின் ப்ரமோ வீடியோக்கள் மட்டுமில்லாமல் கதைக்களத்தையும் சிறப்பாக செய்துவரும் விக்னேஷ் சிவன், இந்த ப்ரமோவையும் சிறப்பாக கொடுத்துள்ளார்.

Actor Pradeep Ranganathan gave dates to Director Vignesh Shivan and the promo video released

இந்த வீடியோவில் விக்னேஷ் சிவனுக்கு சாப்பிடும் டேட்சை கொடுக்கிறார் பிரதீப். இதன்மூலம் விக்னேஷ் சிவன் படத்திற்கு அவர் டேட்ஸ் கொடுத்துள்ளதை மறைமுகமாக விக்னேஷ் சிவன் இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். சரியான நேரத்தில் தன்னை பிரதீப் காப்பாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், தேங்க்யூ ஃபார் தி டேட்ஸ் என்று கூறியுள்ளார். தான் இந்த டேட்சை வைத்து ஃபன் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் எப்போதும் லைட்டான கதைக்களத்தில் ரசிகர்களை கவர்ந்து வருபவர். நடிகை நயன்தாராவை காதல் திருமணம் செய்துள்ள விக்னேஷ் சிவன், வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகவும் மாறியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் இவர், தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தின் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இனி தன்னுடைய படங்களின் அப்டேட்களை இவர் தொடர்ந்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X