Pradeep: பிரதீப் ரங்கநாதனை இயக்கும் சுதா கொங்கரா அசிஸ்டெண்ட்.. அட அவங்கதான் தயாரிப்பு!
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தப்படத்தை தொடர்ந்து தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் லவ் டுடே படத்தை வெளியிட்டார் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை எடுத்து கோலிவுட்டில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது.
'
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார் பிரதீப். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பிலும் அடுத்தப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கங்கிரா அசிஸ்டெண்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் நடிக்க இவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதீப் ரங்கநாதன்: கோலிவுட்டில் இயக்குனராக கோமாளி படத்தில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய இவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தார். இந்தப்படம் அதன் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் பெற்றது. படம் முழுவதும் யோகி பாபுவின் நையாண்டி சிறப்பாக கை கொடுத்தது. ஜெயம் ரவியின் அப்பாவித்தனமான என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்ற வசனமும் படத்திற்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து லவ் டுடே படம் மூலம் இயக்கம் மற்றும் நடிப்பு என இரட்டை குதிரையில் சவாரி செய்தார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே சூப்பர் டூப்பர் வெற்றி: லவ் டுடே படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இந்த ஜோடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. காதலர்களுக்கு இடையில் நிலவும் ஈகோ மற்றும் சந்தேகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்திருந்தது. நார்மலான கதைதான் என்றபோதிலும், சாதாரண கதையையும் சிறப்பாக திரைக்கதை மற்றும் காட்சிகளால் சிறப்பாக்க முடியும் என்பதை இந்த படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தினார் பிரதீப் ரங்கநாதன் விளைவு படம் சூப்பர் சூப்பர் ஹிட். இந்த படத்தை தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரதிப் ரங்கநாதனுக்கு வேல்யூ அதிகரித்துள்ளது.
பிரதீப் -விக்னேஷ் சிவன் கூட்டணி: இதையடுத்து தற்போது விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தில் பிரதீப் இணைந்து நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கிருத்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாகியுள்ள சூழலில் படத்தில் நாயகனாக மட்டுமே அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அடுத்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்தப்படத்தில் அவர் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாகவும் அவருக்கு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுதா கொங்கரா அசிஸ்டெண்ட்டுடன் இணைந்த பிரதீப்: இந்தப்படத்தை சுதா கொங்கராவின் அசிஸ்டெண்ட்ட் கீர்த்தி ஈஸ்வரன் இயக்க உள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய கதையை சொல்லி ஓகே வாங்கியதாகவும் தொடர்ந்து இந்த கதையை பிரதிப் ரங்கநாதனும் ஓகே செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் தான் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எல்ஐசி படத்தில் நடித்துவரும் பிரதீப், விரைவில் இதன் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஏஜிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்தே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அவர் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











