Pradeep Ranganathan: பிரபல நிறுவனத்துடன் கைக்கோர்க்கும் பிரதீப் ரங்கநாதன்.. அறிவிப்பு ஆன் தி வே!
சென்னை: இயக்குனராக கோலிவுட்டில் தன்னுடைய பயணத்தை துவங்கிய பிரதீப் ரங்கநாதன் முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை பெற்று அடுத்த படத்தில் தானே ஹீரோவாகவும் இயக்குனராகவும் களமிறங்கினார். லவ் டுடே படத்தின் மூலம் அவர் தன்னுடைய ஃபேன் பேஸை அதிகரித்ததுடன் மிகப்பெரிய அளவில் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.
தொடர்ந்து அடுத்த இயக்குநர்களுடன் இணைந்து ஹீரோவாக களமிறங்கிவரும் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே, டிராகன் படங்களில் நடித்து வருகிறார். இதில் எல்ஐகே படத்தின் டைட்டில் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்கு எல்ஐசி என்று பெயரிடப்பட்டிருந்தது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் இன்றைய தினம் தனது 31வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தின் டைட்டில் எல்ஐசி என்று இருந்தநிலையில், இன்றைய தினம் பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளையொட்டி படத்தின் புதிய டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலேயே இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எல்ஐசி படத்தின் புதிய தலைப்பு: எல்ஐசி அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று இந்தப் படத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்த நிலையில், எல்ஐசி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டதால் தற்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டிலை LIK என்று மாற்றியுள்ளார். அதாவது Love Insurance Kampany என்று படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட இரு நாயகிகள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்சுடன் காம்போ: டிராகன் படத்தில் கல்லூரி மாணவராக பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். படத்தின் அடுத்தடுத்த ஷெட்யூல்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே அடுத்ததாக ஹீரோவாக தன்னுடைய 4வது படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து படத்திலும் மமீதா பைஜூ நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறாரா என்பது குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
படம் குறித்த அறிவிப்பு: PR04 படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்ஐகே, அஸ்வத் மாரிமுத்து உடனான படம் மற்றும் நடிகராக தன்னுடைய நான்காவது படம் என அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதனிடையே மைத்ரி மூவி மேக்கர்சுடனான பிரதீப் ரங்கநாதனின் படம் குறித்த அறிவிப்பு இன்றைய தினம் அவரது பிறந்த நாளை ஒட்டி மாலையில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாஸான வளர்ச்சி: இயக்குனராகவே தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவக்கினார் பிரதீப் ரங்கநாதன். தன்னுடைய முதல் படமான கோமாளி படத்தில் வித்தியாசமான கதைகளத்துடன் அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அடுத்ததாக இவானாவுடன் ஜோடி சேர்ந்து லவ் டுடே படத்தில் இயக்குநர் மற்றும் நடிகராக களமிறங்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. காதலர்கள் இடையிலான ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து சிறப்பான திரைக்கதையுடன் இந்த படத்தை அமைத்திருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தை முடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து டிராகன் PR04 படங்களிலும் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











