கேவலமா இருக்கீங்கன்னு கத்தி சொன்னாங்க.. லவ் டுடே டூ டிராகன் அனுபவம் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்!

சென்னை: நடிகர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது இயக்கத்தில் வெளியான கோமாளி படத்தில் ரவி மோகன், காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் கொடுத்து சிறப்பான அறிமுகத்தில் அடுத்ததாக லவ் டுடே படத்தில் களமிறங்கியிருந்தார்.

லவ் டுடே படத்தில் மாடர்ன் லவ்வை மையமாக வைத்து கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தில் இவானாவுடன் இணைந்து தானே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் டைரக்ஷனில் நடிகராகவே நடித்து வருகிறார்.

Pradeep Ranganathan Dragon movie tamil cinema

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: கோமாளி படம் மூலம் தமிழில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தில் ரவி மோகன், காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் படம் மிகப்பெரிய என்ட்ரியை பிரதீப்பிற்கு கொடுத்தது. இந்தப் படத்தில் நாம் தொலைத்த அழகான தருணங்களை நினைவுப்படுத்தியிருந்தார். படம் சிறப்பான வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கியதுடன் தானே ஹீரோவாகவும் களமிறங்கினார். இவானாவுடன் பிரதீப் நடித்திருந்த இந்தப் படம் மாடர்ன் லவ்வை மையமாக வைத்து வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

டிராகன் படம்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் வலம் வர துவங்கியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படங்களில் நடித்து முடித்துவிட்டார். இதனிடையே பிரதீப் -அஷ்வத் கூட்டணியில் உருவான டிராகன் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக பிரதீப்பின் லவ் டுடே படத்தையும் இவர்கள்தான் தயாரித்திருந்தனர். இதனிடையே அடுத்தடுத்த ஹிட்களாக பிரதீப் திக்குமுக்காடியுள்ளார். ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கேவலப்படுத்திய ரசிகர்கள்: இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசியிருந்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தின் பிரமோஷன்களின்போது தான் சந்தித்த அவலத்தை பேசியுள்ளார். லவ் டுடே பிரமோஷனுக்காக மேடையேறிய தன்னிடம் எப்படி இருக்கீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டதாகவும் தானும் நன்றாக இருக்கிறேன் என்று பதிலளித்த நிலையில், பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து கேவலமாக இருப்பதாக பதில் வந்ததாகவும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த சம்பவம் தனக்கு அதிகமான வருத்தத்தை கொடுக்கவில்லை என்றும் சிறுவயதில் இருந்தே இதுபோன்ற விமர்சனங்களை தான் சந்தித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகமான நம்பிக்கை: ஆனால் தற்போது தன்மீது தனக்கு அதிகமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதீப் கூறியுள்ளார். சிறிது காலங்கள் தன்னுடைய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது தன்னை விரும்பத் துவங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரிடம் பேசுவதற்கு முன்னதாக அவரின் தோற்றத்தை வைத்தே அவரை மற்றவர்கள் கணிப்பதாகவும் தொடர்ந்து அவரிடம் பேசி பழகும்போதுதான் அவரின் உண்மையான நல்ல விஷயங்கள் வெளிப்படும் என்றும் பிரதீப் ரங்கநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X