Pradeep Ranganathan: தனுஷை போட்டியாக நினைக்கலை.. டிராகன் பிரஸ் மீட்டில் பிரதீப் ரங்கநாதன் ஓபன்!
சென்னை: நடிகர் மற்றும் இயக்குநராக வலம்வந்துக் கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநராக இரண்டு படங்களை கொடுத்து மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர், தற்போது மற்ற இயக்குநர்களின் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் பிரஸ் மீட்டிலும் ஈடுபட்டனர். இந்தப் படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படமும் பிரதீப்பிற்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், சினேகா, விஜே சித்து உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டிராகன் படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
டிராகன் படம்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் படக்குழுவினர் பத்திரிகையாளர்களையும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் பிரதீப் ரங்கநாதன், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அஸ்வத் மாரிமுதுது ஆகியோர் பங்கேற்றனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்டப்பட்டன. வரும் 21ம் தேதி ரிலீசாவுள்ளது டிராகன் படம். இதே நாளில் நடிகர் தனுஷின் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ரிலீசாகவுள்ளது.
தனுஷ் போட்டியில்லை: இதுகுறித்து பிரதீப் ரங்கநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,அஜித் படத்தின் ரிலீசால பிப்ரவரி 21ம் தேதிக்கு டிராகன் படத்தின் ரிலீசை தள்ளி வைத்ததாகவும் இதே காரணத்திற்காகத்தான் தனுஷின் படமும் ரிலீஸ் தள்ளிப் போனதாக தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ள பிரதீப் ரங்கநாதன், அதனால் ஒரே நேரத்தில் இந்த இரு படங்களும் ரிலீசாவதை தான் போட்டியாக நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரு படங்களுமே காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் எத்தகைய வரவேற்பை கொடுப்பார்கள் என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
டிராகன் ட்ரெயிலர் ரிலீஸ்: இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள நிலையில் இந்த ட்ரெயிலரில் படத்தின் 10 சதவிகித காட்சிகளே இடம்பெற்றுள்ளதாகவும் தியேட்டர் ஆடியன்சிற்காக அதிகமான சர்ப்பிரைஸ்களை படத்தில் சேமித்து வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார். படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிரதீப்பின் லவ் டுடே படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில் அவரது அடுத்தப்படத்தை இயக்குவது மிகப்பெரிய சவாலாக அமைந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











