Pradeep Ranganathan: நான் ஒரு Looser.. என்னோட பலமே இதுதான்.. பிரதீப் ரங்கநாதன் ஓபன்!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படம் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியானது. பல ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞரை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வித்தியாசமான கதைக்களம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிக சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.
அடுத்ததாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே படம் அவரை உச்சத்தில் கொண்டு சேர்த்தது. இதையடுத்து இயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு அடுத்தடுத்து நடிகராக அவர் படங்களில் இணைந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஒரு படம் என மூன்று படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் டிராகன் படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: இயக்குநர், நடிகர் என இருவேறு தளங்களில் கோலிவுட்டில் தன்னை நிலைநிறுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்ற படத்தின் மூலமே இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படமாக மாறியது. முன்னதாக குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றிருந்த பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக களம் இறங்கினார். இந்தப் படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். காதலர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.
லவ் டுடே படத்தின் அசத்தல் வெற்றி: லவ் டுடே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக டிராகன் படம் இவரது நடிப்பில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் குறும்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிரதீப் ரங்கநாதன், டிராகன் படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான பிரமோஷன்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படத்தின் ரிலீஸ் சிறிது தாமதமாகவும் படத்தின் சிஜி வேலைகள் அதிகமான காலத்தை எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு Looser: இதையடுத்து அடுத்ததாக ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ள பிரதீப் ரங்கநாதன், குறும்படங்கள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறும்பட போட்டியில் தான் ஈடுபட்டதாகவும் ஆனால் தன்னுடைய படைப்பு வெற்றி பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால் மற்றவர்கள் அனைவரும் லூசர்கள் என்று தான் அடையாளப்படுத்தப்படுவதாகவும் நானும் ஒரு காலகட்டத்தில் லூசராக தான் இருந்ததாகவும் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னுடைய குறும்படம் தேர்வு செய்யப்படவில்லை என்றால் யாரும் தன்னுடைய மன உறுதியை இழக்கக்கூடாது என்றும் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் பலம்: இதனிடையே அதிகமான உழைப்பை கொடுப்பது மற்றும் நல்லதை மட்டுமே நினைப்பது இவற்றை தன்னுடைய பலமாக தான் நினைப்பதாகவும் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தான் செயல்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











