Pradeep Ranganathan: டிராகன் படத்தின் சூட்டிங்கை நிறுத்திய பிரதீப் ரங்கநாதன்.. என்னதான் காரணம்?
சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து மும்முரமாக நடந்து வந்த சூழலில் இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட அவர், தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருந்தார்.
கடந்த 6ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு முதல் ஷெட்யூல் கடந்த 13ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மீண்டும் எல்ஐசி படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதனால் டிராகன் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் எப்போது மீண்டும் துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: இயக்குநர் மற்றும் நடிகராக கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தில் இயக்குனராக ஜெயம் ரவியுடன் களமிறங்கிய இவர், முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். படம் ஜெயம் ரவிக்கும் சிறப்பாக கை கொடுத்தது. இதையடுத்து அடுத்ததாக லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்து இயக்கியிருந்தார். இந்தப் படம் சூப்பர் சூப்பர் ஹிட்டடித்த சூழலில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டிராகன் படம்: இந்நிலையில் அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த 6ம் தேதி சிறப்பான பூஜையுடன் படக்குழுவினர் அனைவரும் இணைந்த நிலையில் சிறப்பாக துவங்கப்பட்டது. படத்தின் டைட்டில் ஃபயராக இருக்க வேண்டும் என்று முன்னதாக அர்ச்சனா கல்பாத்தி கூறுவதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து இந்த படத்தின் டைட்டில் நெருப்புடன் வெளியிடப்பட்டது. படத்திற்கு டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த 13ம் தேதியுடன் நிறைவடைந்த சூதலில் அடுத்தடுத்த செட்யூல்களை படக்குழுவினர் திட்டமிடுவார்கள் மற்றும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பர்ஸ்ட் ஷெட்யூல் நிறைவு: ஆனால் கடந்த 13ம் தேதியுடன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து விக்னேஷ் சிவனுடன் எல்ஐசி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்து விட்டே அவர் அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் பாஸ்ட் மோடில் முதல் ஷெட்யூல் நடந்த சூழலில் டிராகன் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்ட சூட்டிங் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விரைவில் நிறைவடையும் எல்ஐசி சூட்டிங்: லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) படத்தின் சூட்டிங் முன்னதாக சிங்கப்பூரில் நடந்தது. இதில் பிரதீப் ரங்கநாதன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துவரும் சூழலில் எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். படம் ஆகஸ்டில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











