Pradeep: தமிழ்நாடு.. ஆந்திரா.. பக்கத்து ஸ்டேட்டுக்கும் படையெடுத்த பிரதீப் ரங்கநாதன்.. என்ன காரணம்?

ஐதராபாத்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படம் அவருக்கு மிகச் சிறப்பான என்ட்ரியை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.

இந்த இரு படங்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறப்பான என்ட்ரியை அடுத்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான டிராகன் படம் மிகச் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர். இவானா, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Pradeep Ranganathan Dragon movie Kerala

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் இளம் நடிகர்களில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறார். இயக்குநராகவே கோமாளி படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறினார். இந்த படத்தில் ரவி மோகன், காஜல் அகர்வால், யோகி பாபு காம்பினேஷன் மிகவும் சிறப்பாக அமைந்தது. தற்காலத்திய மக்களின் ரசனை குறித்த கேள்விகளை இந்த படம் எழுப்பியது. படத்தில் கோமாவிலிருந்து மீண்டு தற்காலத்திய நடைமுறைகளை அனுசரிக்க முடியாத நபராக ரவி மோகன் நடித்திருந்தார். படம் மிகச் சிறப்பான வெற்றியும் வரவேற்பையும் ரசிகர்களிடையே பெற்றுக் கொடுத்தது.

அடுத்தடுத்த வெற்றிகள்: கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் மிகச் சிறப்பான வெற்றியைபெற்றுக் கொடுத்ததுடன் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் இணைந்து நடித்திருந்த டிராகன் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்து வருகிறது. கடந்த இரு தினங்களில் இந்த படத்தின் வசூல் கோடிகளை உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்களுக்காக முன்னதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டவர்களுடன் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்திருந்தார் பிரதீப்.

டிராகன் படத்தின் வெற்றி: டிராகன் படம் குறித்தும் தன்னுடைய முந்தைய படங்கள் மற்றும் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்போது டிராகன் படம் மிகச் சிறப்பாக அமைந்து வரும் நிலையில் தற்போது ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு படக்குழுவினருடன் சென்றுள்ளார். முன்னதாக அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழுவினர் அடுத்ததாக ஜெகதாம்பா திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். இந்நிலையில் அடுத்ததாக இன்றிரவு ஐதராபாத்தின் மைத்ரி விமல் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா சென்ற பிரதீப்: விசாகப்பட்டினத்தில் அவர் திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த நிலையில் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை ஆந்திர ரசிகர்கள் கொடுத்துள்ளனர். இதன் புகைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. படம் சிறப்பான கதைக்களத்துடன் மொழி பேதம் இன்றி அடுத்தடுத்த ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X