Pradeep: சூப்பர் ஃபாஸ்ட் மோடில் பயணிக்கும் பிரதீப்பின் டிராகன் படம்.. முதல் ஷெட்யூல் நிறைவு!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி, லவ் டுடே படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 6ம் தேதி சென்னையில் துவங்கிய சூழலில் முதல் கட்ட ஷூட்டிங்கை நேற்றைய தினம் படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: இயக்குனராக கோலிவுட்டில் கோமாளி படம் மூலம் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் காஜல் அகர்வால், யோக் பாபு இணைந்து நடித்திருந்த கோமாளி படம் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக இவானா, யோகிபாபு இவர்களுடன் இணைந்து தான் இயக்கிய லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக களம் இறங்கினார்.இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். இதனால் பிரதீப் மார்க்கெட் வேல்யூ தமிழில் தாறுமாறாக எகிறியுள்ளது. அவரின் இயக்கத்தை காட்டிலும் நடிப்பில் அவரை ஹீரோவாக புக் செய்ய அடுத்தடுத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்ஐசி படம்: இதையடுத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தை இயக்கி கவனம் பெற்ற அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் பிரமோ நெருப்புடன் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் சூழலில் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டவர்கள் படத்தின் பூஜையில் கலந்துக் கொண்டனர்.
டிராகன் பட சூட்டிங்: இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் கடந்த 6ம் தேதி துவங்கி முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட சூட்டிங்கை அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டுள்ளார். படத்தின் சூட்டிங் எடுக்கும் வேகத்தை பார்த்தால் இந்த ஆண்டிலேயே படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் சூழலில் உடனடியாக அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். படத்துக்கு படம் அவர் தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பிரதீப்பின் சம்பளம்: ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் வரை பிரதீப் ரங்கநாதன் சம்பளமாக பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஹீரோவாகவே அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சூழலில் இயக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். படத்தில் கேஎஸ் ரவிக்குமார், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











