டிராகன் படத்தில் இணையும் தெலுங்கு -மலையாள நாயகிகள்.. கல்லூரி கலாட்டா செய்ய காத்திருக்கும் பிரதீப்!

சென்னை: நடிகர் -இயக்குனர் என இருவேறு தளங்களில் பயணித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவரது இயக்கத்தில் வெளியான கோமாளி மற்றும் லவ் டுடே படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. இதில் லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு மற்றும் இயல்பான காமெடி சென்ஸ் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிலையில் தற்போது ஹீரோவாகவே கோலிவுட்டில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார் பிரதீப். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என இரு வேறு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இவர் கமிட்டாகி வருகிறார்.

Pradeep Ranganathan Ashwath Marimuthu LIC movie Director Vignesh shivan tamil cinema

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: இயக்குனர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இயக்குனராக ஜெயம் ரவியுடன் இணைந்திருந்த கோமாளி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தை காட்டிலும் அடுத்ததாக இயக்குநராகவும் நடிகராகவும் பிரதீப் ரங்கநாதன் களமிறங்கியிருந்த லவ் டுடே படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படத்தில் இவானா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையிலான காதல், மோதல் மற்றும் ஈகோ பிரச்சனைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

உயர்ந்த மார்க்கெட் வேல்யூ: இந்த இரு படங்களை அடுத்து கோலிவுட்டில் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் வேல்யூ மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக இவர் 20 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் எல்ஐசி படத்தை முடிப்பதற்கு முன்னதாகவே அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ள சூழலில் அடுத்த கட்ட சூட்டிங் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரதீப்புடன் இணையும் நாயகிகள்: இந்நிலையில் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் தெலுங்கு மற்றும் மலையாள பட நாயகிகள் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்குப் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள பட நாயகியும் இந்த படத்தில் பிரதீப்புடன் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மமீதா பைஜூ என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே அடுத்த வாரத்தில் துவங்கவுள்ள இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னை மற்றும் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்லூரி சப்ஜெக்ட்: இளமை துள்ளலுடன் கல்லூரி பின்புலத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரதீப்புடன் விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். கடந்த மாத துவக்கத்தில் பூஜையுடன் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங்கில் பிரதீப் இணைந்திருந்தார். எல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர், இடையில் கேப் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தில் இணைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இன்னும் சில தினங்களில் மீண்டும் துவங்கவுள்ள டிராகன் படத்தின் சூட்டிங்கிலும் இணையவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X