Pradeep Ranganathan: தப்பு பண்றது தப்பே இல்ல.. என்ன இப்படி இருக்காரு பிரதீப்.. டிராகன் பட ட்ரெயிலர்!

சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன் -அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் டிராகன். இந்தப் படம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக சூட்டிங் நடத்தப்பட்டு ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது.

தமிழில் கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து டிராகன், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என படங்களில் நடித்துள்ளார். இதில் டிராகன் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Pradeep Ranganathan Dragon movie Ashwath Marimuthu

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிரதீப் கோமாளி படத்தின்மூலம் இயக்குநராக தமிழில் என்ட்ரி கொடுத்த நிலையில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்திருந்தது. படத்தின் கதைக்களமும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான லவ் டுடே படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் காதலர்களுக்குள்ளே ஏற்படும் ஈகோவை கதைக்களமாக கொண்டிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இவரது ஸ்கிரிப்ட் மிகச்சிறப்பாக அமைந்து அடுத்தடுத்த வெற்றிகளை இவருக்கு கொடுத்துள்ள நிலையில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராகவும் நடிகராகவும் மாறியுள்ளார் பிரதீப்.

நடிகராக அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே இயக்கத்தை கைவிட்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் விக்னேஷ் சிவனுடனும் இணைந்து நடித்துள்ளார். இதில் லவ் இன்சூரன்ஸ் படம் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. படத்தில் அதிகமான சிஜி வேலைகள் இருப்பதே படத்தின் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே டிராகன் படம் சில மாதங்களிலேயே சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு தற்போது ரிலீசுக்கும் தயாராகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

டிராகன் பட ட்ரெயிலர்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. லியோன் ஜேம்ஸ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் பிரதீப்புடன் கயடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இன்ஜினீயரிங் மாணவராக கல்லூரியில் மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன் அனைவரது வெறுப்பையும் சம்பாதிப்பதாக இந்த ட்ரெயிலரில் காணப்படுகிறது.

தப்பை செய்தால் தப்பில்லை: அனைவருக்கும் மோசமான உதாரணமாக காட்டப்படும் பிரதீப், ஒரு கட்டத்தில் அதிகமான அரியர்ஸ் இருப்பதாலும் அதிகமான அவமானங்களை சந்திக்கிறார். இதையடுத்து தான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு ஏற்படுகிறது. இதனிடையே, தப்பை செய்வது தப்பில்லை என்று அனுபமா கூறுவதாக இந்த ட்ரெயிலரில் காணப்படுகிறது. அப்படி என்ன தப்பை பிரதீப் செய்கிறார் என்பதாக இந்தப் படத்தின் கதைக்களத்தில் காணப்படும் என இந்த ட்ரெயிலர் மூலம் அறிய முடிகிறது. ஒரு முழு படத்தை பார்த்த அனுபவத்தை இந்த ட்ரெயிலர் கொடுத்தாலும் இடையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தையும் இந்த ட்ரெயிலர் நினைவு படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X