Dragon: டிராகன் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அப்டேட்.. இன்னும் ஹீரோயினை ஃபிக்ஸ் செய்யாத படக்குழு!
சென்னை: இயக்குநர், நடிகர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தில் ஜெயம்ரவியுடன் இயக்குநராக துவங்கிய இவரது பயணம், முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தானே நாயகனாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கியிருந்தார் பிரதீப்.
இந்தப் படம் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட்டடிக்க, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடிக்கும் வாய்ப்புகள் இவரது வீட்டுக் கதவை தட்டி வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படங்களில் இணைந்து நடித்து வருகிறார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்: நடிகர் பிரதீப் ரங்கநாதன், இயக்குநராகவே தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். முதல் படமான கோமாளியிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படத்திலேயே இயக்கம் மற்றும் ஹீரோவாக லவ் டுடே படத்தில் களமிறங்கினார். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் அவருக்குக் கைக்கொடுத்தது. படத்தில் இவானா பிரதீப்பிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்த படங்கள்: லவ் டுடே படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு பிரதீப்பிற்கு கிடைத்து வருகிறது. அவரது சம்பளமும் 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனுடன் இணைந்து எல்ஐசி படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இநத்ப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், கடந்த மாதத்தில் இந்தப் படத்தின் டைட்டில் ரசிகர்களை கவரும்வகையில் வெளியிடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டது.
டிராகன் படம்: இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங், சில தினங்களிலேயே நிறைவடைந்த நிலையில், மீண்டும் எல்ஐசி படத்தின் சூட்டிங்கில் பிரதீப் ரங்கநாதன் இணைந்திருந்தார். இந்நிலையில் டிராகன் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஜூன் மாதம் 2வது வாரத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கல்லூரி கதைக்களத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங், சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டிராகன் படத்தின் நாயகி: இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கே துவங்கவுள்ள நிலையில், படத்தின் ஹீரோயின் இன்னும் இறுதிச் செய்யப்பட வில்லை. படத்தில் மலையாளப்பட நாயகி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் மமிதா பைஜு நாயகியாக இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கராவுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











