"உங்க வீட்டு பொண்ணுங்க உள்ளாடை போடாம போனா சுதந்திரனும்னு கைதட்டுவீங்களா?".. பிரபல நடிகை ஆவேசம்

மதுவின் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்து நடிகை சாண்ட்ரா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Madhumitha slammed abi

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஆபாசமாக ஆடை அணிந்தார்கள் என்ற மதுவின் கருத்துக்கு ஆதரவாக ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல சீரியல் நடிகை சாண்ட்ரா.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டதால் அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை மதுமிதா. அவரது வெளியேற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மது.

அப்போது பிக் பாஸ் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். கூடவே பிக் பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் சாக்‌ஷியின் உடை விவகாரம் குறித்தும் அவர் காட்டமாக விமர்சித்தார்.

மது பேட்டி

மது பேட்டி

பிக்பாஸ் வீட்டில் மாலையில் உள்ளாடை போடாமல் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சுற்றியதாக அவர் குற்றம் சாட்டினார். மதுவின் இந்த பேச்சுக்கு ஆதரவைப் போலவே கடும் எதிர்ப்பும் எழுந்தது. அதெப்படி பெண்கள் உடை அணிவதைப் பற்றி விமர்சிக்கலாம், அது அவர்களது சுதந்திரம் என எதிர்பாளர்கள் வாதிட்டனர்.

அபி பதிலடி

அபி பதிலடி

அபிராமியும் கூட தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘நேர்கொண்ட பார்வை படத்துக்கு அவங்களுக்கு (மதுவுக்கு) டிக்கெட் எடுத்துக் கொடுங்க. உங்கள உயர்த்திக் காட்டணும்னு ஏன் மத்தவங்களை கேவலப் படுத்துறீங்க' என அஜித் வசனத்தைப் பேசி தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

சாண்ட்ராவின் பதிவு

சாண்ட்ராவின் பதிவு

இந்நிலையில், பிரபல நடிகர் ப்ரஜனின் மனைவியும், நடிகையுமான சாண்ட்ரா இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "இந்த ஸ்டேட்மெண்ட் எப்படி மதுமிதாவுக்கு எதிராக திரும்பியது என்றே தெரியவில்லை. அவர் பேசியதில் என்ன தவறு.

சரமாரிக் கேள்வி

உங்கள் வீட்டு பெண்கள் அப்படி உள்ளாடை அணியாமல் பொதுமக்கள் கூடும் இடத்தில் நடந்து சென்றால் சும்மா இருப்பீர்களா. இப்படி உடை அணிவது தான் சுதந்திரமா? உள்ளாடை போடாமல் போனால் சுதந்திரம்னு கைதட்டுவீங்களா?" என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

சாண்ட்ராவின் இந்தப் பதிவிற்கும் வழக்கம் போல் சிலர் ஆதரவாகவும், பலர் எதிர்ப்பாகவும் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். தவறு என விமர்சிப்பவர்கள் மோசமான வார்த்தைகளால் அவரைத் திட்டியுள்ளனர். அதே சமயம் நல்ல விசயத்தைப் பற்றி பேசியுள்ளதாக சாண்ட்ராவைப் பலர் பாராட்டியும் உள்ளனர். சிலர் உங்களுக்கெதற்கு இந்த வீண் வேலை எனவும் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X