ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது - காஷ்மீர் ஃபைல்ஸை கழுவி ஊற்றிய பிரகாஷ் ராஜ்

திருவனந்தபுரம்: தான் இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுக்கக்கூடாது என அப்படத்தின் இயக்குநர் பேசியிருந்த சூழலில், அந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார். ஆரம்பத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியல் சார்ந்த கருத்தையும், பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவாவுக்கு எதிரான கருத்தையும் காத்திரமாக வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவும் செய்தார். இந்தச் சூழலில் காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து அவர் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்

சர்ச்சையை கிளப்பிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் காஷ்மீர் ஃபைல்ஸ். ஏற்கனவே இஸ்லாமியர்கள் இந்துத்துவா சக்திகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அதற்கு வலு சேர்க்கும்விதமாக காஷ்மீர் ஃபைல்ஸ் படம் இருப்பதாக பலரும் விமர்சனத்தை முன்வைத்தார்.

கோவா திரைப்பட விழாவில் சர்ச்சையை உருவாக்கிய காஷ்மீர் ஃபைல்ஸ்

கோவா திரைப்பட விழாவில் சர்ச்சையை உருவாக்கிய காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்தச் சூழலில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அந்த விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த விழாவின் ஜூரியும், இஸ்ரேலிய நாட்டின் இயக்குநருமான நாடவ் லேபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் படம். பிரசார தன்மை கொண்ட இழிவான படமாக இருக்கிறது. இந்தப் படம் போட்டி பிரிவில் வந்தது சரியானது அல்ல" என வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அவரது விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனில் நிராகரிக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ்

ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷனில் நிராகரிக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ்

இந்தச் சூழலில் ஆஸ்கர் விருதில் கலந்துகொள்ள நாமினேஷனுக்கு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் அனுப்பப்பட்டது. ஆனால் படக்குழு எதிர்பார்க்காத வகையில் ஆஸ்கர் நாமினேஷனில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமானது நிகாரிக்கப்பட்டது. இதற்கு படத்தில் நடித்த அனுபம் கேர், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது பாஸ்

ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது பாஸ்

இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரகாஷ் ராஜ் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். விழாவில் பேசிய அவர், "பதான் படத்தை தடை செய்ய நினைத்தார்கள். ஆனால் அப்படம் வெளியாகி 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்தப் படத்தை எதிர்த்த மதவெறியர்கள் மோடியின் படத்தை 30 கோடி ரூபாய்க்குக்கூட ஓடவைக்கவில்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற பிரசார படத்தை எடுத்து வெளியிட்டார்கள். அந்தப் படத்தை சர்வதேச ஜூரியும் விமர்சித்திருந்தார். அப்படி இருந்தும் புத்தி வரவில்லை. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர், 'ஏன் என் படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை' என கேட்கிறார். அந்தப் படத்துக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கூர்கூட கிடைக்காது" என்றார்.

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் பதான்

பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் பதான்

முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படத்தின் ஒரு பாடலில் காவி நிற உடையை தவறாக காண்பித்திருக்கிறார்கள் என கூறி படத்தை தடை செய்ய சிலர் முயற்சி செய்தனர். இருப்பினும் சமீபத்தில் அந்தப் படம் வெளியாகி பல நூறு கோடிகளை சம்பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X