கணவருடன் வாழ்ந்த அந்த வாழ்க்கை.. மகள்களால் வலியை மறந்தேன்.. பிரகாஷ் ராஜ் முதல் மனைவி பேட்டி!
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜினு முதல் மனைவியான நடிகை லலிதா மனதில் உறுதி வேண்டும், மாப்பிள்ளை, புலன் விசாரணை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல கவர்ச்சி நடிகையின் தங்கையான இவர், 1994ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகர் பிரகாஷ் ராஜும், லலிதாவுக்கும் திருமணமாகி 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
இணை பிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக 2009ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த லலிதா குமாரி, தான் கடந்து வந்த பாதை குறித்து அதில் சந்தித்த பிரச்சனை குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,நான் வெளி ஊரில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வரவில்லை, என் அப்பா விஜயபுரி ஆனந்தன், பெரிய வெற்றிப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம்.

நடிகை லலிதா: என் குடும்பம் சினிமாவில் இருந்தாலும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. ஒருமுறை பாலச்சந்திருக்கு வாழ்த்து சொல்வதற்கான குடும்ப போட்டோவை அனுப்பி இருந்தோம். அதைப்பார்த்த பாலசந்தர் என் பெரிய அக்காவை படத்தில் நடிக்க கேட்டார். அப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால், அடுத்ததாக என்னை அழைத்தார். அப்போது நான் ஒன்பதாவது படித்துக்கொண்டு இருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் சினிமாவிற்குள் வந்தேன்.
16 வருட வாழ்க்கை: பிரகாஷ்ராஜ் கீதா மேடம் மூலமா பாலசந்தர் சாரை பார்க்க வந்திருந்தார் அப்போது தான் அவரை பார்த்தேன். அப்போ, அவர் சாந்திகா கூட நடித்திருந்தார். அப்போது பழக்கமாகி , 3 மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பூஜா, மேக்னா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். நாங்கள் இருவரும் 16 வருசம் ஒன்றாக வாழ்ந்தோம். எங்களுக்குள் சின்ன விரிசல் வந்தது. இரண்டு பேருமே உட்கார்ந்து பேசி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான், இனி இதைபற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை, அவர், அவர் வாழ்க்கையை வாழ்த்து கொண்டு இருக்கிறார் என்றார்.
மன அழுத்தத்தில் இருந்தேன்: விவாகரத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன், அப்போது என் அக்கா, அண்ணன் என என் குடும்பத்தினர் என்னுடன் இருந்தனர். அது மட்டுமில்லாமல் என் இரண்டு மகள் என் கூட இருந்தது எனக்கு மிக்பெரிய பலமாக இருந்தது. இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விட முடியாது,
ஏன் என்றால், இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போக போகிறோம். இதன் இடைப்பட்ட காலத்தில் வரும் எந்த உறவும் நிலையானது இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டேன்.
இரண்டாம் திருமணம்: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு போனி வர்மா என்ற நடன இயக்குநருடன் காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர்களுக்கு 6 வயதில் வேதந்த் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











