வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜ் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. தெரிஞ்சா அசந்துடுவீங்க

சென்னை: வாரிசு படத்தில் நடித்ததற்காக பிரகாஷ் ராஜ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்தார். சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த வாரிசுக்கு தமன் இசையமைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

விஜய் - பிரகாஷ் ராஜ் எவர்க்ரீன் கூட்டணி

விஜய் - பிரகாஷ் ராஜ் எவர்க்ரீன் கூட்டணி

விஜய் கேரியரிலேயே கில்லி படத்துக்கு எப்போதும் தனியிடம் உண்டு. கமர்ஷியல் ஹீரோ பாதையை திருமலை படம் அவருக்கு போட்டுக்கொடுத்தாலும் பக்கா கமர்ஷியல் ஹிட்டை கொடுத்தது கில்லிதான். அந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரத்தைவிட அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜ் ஏற்றிருந்த முத்துப்பாண்டி கதாபாத்திரம். இந்தப் படத்திலிருந்து விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணியில் பல படங்கள் வெளியாகின.

செல்லத்தை பிராண்டாக்கிய பிரகாஷ் ராஜ்

செல்லத்தை பிராண்டாக்கிய பிரகாஷ் ராஜ்

கில்லி படத்தில் விஜய் செய்த ஆக்‌ஷன்களைவிட ஒரு படி அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும்தான். குறிப்பாக த்ரிஷாவை அவர் செல்லம் என்று அழைத்தது இன்றுவரை ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரகாஷ் ராஜ் மிக இயல்பாக ஸ்கோர் செய்திருப்பார். செல்லம் என்ற வார்த்தை பிரகாஷ் ராஜால் பிராண்டானது. இதனால் பெரும்பாலான மேடைகளில் செல்லங்களா என்றுதான் பிரகாஷ் தனது பேச்சை ஆரம்பிப்பார்.

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த விஜய் - பிரகாஷ் ராஜ்

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த விஜய் - பிரகாஷ் ராஜ்

கில்லியில் ஆரம்பித்த விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணி அடுத்தடுத்து போக்கிரி, வில்லு என தொடர்ந்தது. அதில் போக்கிரி மெகா ஹிட்டாக வில்லு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து விஜய்யும், பிரகாஷ் ராஜும் இணைந்து நடிக்கவில்லை. இந்தச் சூழலில் மீண்டும் வாரிசு படத்தில் அதாவது 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்தனர். ஆனால் இந்தப் படத்தில் இருவருக்குமான காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

பிரகாஷ் ராஜ் பெற்ற சம்பளம் எவ்வளவு?

பிரகாஷ் ராஜ் பெற்ற சம்பளம் எவ்வளவு?

இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்ததற்காக பிரகாஷ் ராஜ் பெற்ற சம்பளம் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்தப் படத்துக்கு பிரகாஷ் ராஜ் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றாராம். வாரிசு படத்தில் பிரகாஷ் ராஜின் காட்சிகள் அவ்வளவாக கவனத்தை ஈர்க்காவிட்டாலும் பிரகாஷ் ராஜுக்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பது ஓகேதான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். முன்னதாக, வாரிசு படத்தில் நடித்ததற்காக சரத்குமாருக்கும் ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X