Prakash Raj: தெரியாமல் செய்துவிட்டேன்.. மனம் வருந்தி பேசிய பிரகாஷ் ராஜ்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சட்ட விரோத பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உட்பட 25 பேர் மீது தெலுங்கான போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரகாஷ் ராஜ், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் பண்ண தப்பு என மனம் வருந்தி பேசி உள்ளார்.
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக வழி நடத்தியதற்காக நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் புனித்ரா சர்மா குற்றம் சாட்டினார். மேலும், பண தேவை உள்ள பலர், நடிகர்கள் இந்த விளம்பரத்தில் நடித்து இருப்பதால், அவர்கள் சொல்வதை உண்மை என நம்பி, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை இதில் இழந்து விடுகிறார்கள். பின் வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கும் சென்று விடுகிறார்கள் என அவர் புகார் அளித்திருந்தார். புனித்ரா சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்தனர், புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லஷ்மி, நிதி அகர்வால்,வர்ஷினி சௌந்தர்யா என 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரகாஷ் ராஜ் விளக்கம்: இணையத்தில் விஷ்வரூபம் எடுத்து இருக்கும் இந்த பிரச்சனையில் பிரகாஷ் ராஜ் பெயரும் அடிபட்டுள்ளதால், அது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் பெட்டின் ஆப் விளம்பரத்தில் நடித்தேன், அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இதற்கு பதில் சொல்லி ஆக வேண்டும். இதுவரை காவல்துறையிடம் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை, அப்படி வந்தால் கட்டாயம் அதற்கு நான் பதில் அளிப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 2016ம் ஆண்டு, இது போன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. நான் அதை விளம்பரப்படுத்தினேன். சில மாதங்களுக்குப் பிறகு, தவறை உணர்ந்தேன்.
மன்னித்துவிடுங்கள்: ஆனால், ஒப்பந்தத்தின் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த வருடம், ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் என்னை அணுகினார்கள். அது தவறு என்று நான் அவர்களிடம் சொன்னேன். 2017ம் ஆண்டு எனது விளம்பரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால், 2021ம் ஆண்டு, வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கியது. அவர்கள் மீண்டும், நான் நடித்த அந்த விளம்பரத்தை விளம்பரம் செய்தனர். நான் உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நான், விளம்பரத்தில் நடிதேன். ஆனால், அதில் தொடரவிரும்பவில்லை என அவர்களுக்கு அறிவிப்புகளைக் கொடுத்து, மெயில் அனுப்பினேன். அது தவறு என்று நான் சொன்னதும், அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.இது ஒன்பது வருடத்திற்கு முன்பு நான் தெரியாமல் செய்த தவறு, இதற்காக நான் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இளைஞர்களும் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த வீடியோவில் பேசி உள்ளார்


Click it and Unblock the Notifications











