கடைசி எப்பவும் ஸ்பெஷல்தான்.. விஜய்யின் தளபதி 69 படத்தில் இணைந்த ஹாய் செல்லம் நடிகர்!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் சென்னையில் துவங்கவுள்ளது. முதல் கட்டமாக இந்த படத்தின் பாடல் காட்சியை ஹெச் வினோத் படமாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளைய தினம் படத்தின் பூஜை சென்னையில் நடக்க உள்ள நிலையில் இதில் விஜய் உள்ளிட்ட படத்தின் நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இதனிடையே இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் தொடர்ந்து ஒரு வார காலம் நடக்க உள்ளதாகவும் இது பாடல் காட்சிக்கான சூட்டிங் என்றும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்தும் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

vijay thalapathy 69 movie prakash raj

நடிகர் விஜய்: நடிகர் விஜய் எப்போதுமே அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். அவரது படங்களை திருவிழாவாக கொண்டாடிவரும் அவரது ரசிகர்களுக்கு கடைசி திருவிழாவிற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருவது சற்று ஆதங்கத்தையும் அதே சமயத்தில் உற்சாகத்தையும் அளித்து வருகின்றன. விஜய்யின் இறுதி படமாக உருவாக உள்ள தளபதி 69 படத்தின் அறிவிப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில் அனிருத் இசையமைக்கவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தது.

தளபதி 69 படம்: இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இந்த படத்தின் நடிகர், நடிகைகளை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பிராசஸும் தொடர்ந்து நடந்தது. முதல் நாளில் பாபி தியோலை மட்டுமே அறிமுகம் செய்த படக் குழுவினர், அடுத்தடுத்த இரு தினங்களில் நடிகை மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, நரேன், கௌதம் மேனன், பிரியாமணி என அடுத்தடுத்த நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தினர். இந்நிலையில் இந்த அறிவிப்பின் கடைசி நடிகராக, பிரகாஷ்ராஜை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. செல்லம் நடிகர் என்று அவரை செல்லம் கொஞ்சியுள்ளது கேவிஎன்.

vijay thalapathy 69 movie prakash raj

நடிகர் பிரகாஷ்ராஜ்: முன்னதாக விஜய்யின் கில்லி படத்தில் நடித்திருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், ஹாய் செல்லம் என்று அந்த படத்தில் திரிஷாவை பார்த்து கொஞ்சலாக கூப்பிடுவார். இது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வரை பல மீம்ஸ்களுக்கு இந்த டயலாக் மிகப்பெரிய வகையில் துணை புரிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் மீண்டும் தளபதி 69 படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தில் வில்லனாக நடிகர் பாபி தியோல் இணைந்துள்ள நிலையில் பிரகாஷ்ராஜ் கேரக்டர் ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து அறிவித்தது கேவிஎன்.

தளபதி 69 படத்தின் பூஜை: விஜய்யுடன் இணையும் நடிகர்கள், நடிகைகள் குறித்த இந்த அறிவிப்பை ரசிகர்களும் கொண்டாடிய நிலையில், நாளைய தினம் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் முதல் கட்டமாக விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து பாடல் காட்சியில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஒரு வாரம் சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் நடக்கவுள்ள நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து விரைவில் பட குழுவினர் அப்டேட் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X