அந்த மனசுதான் சார்... ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து!

சென்னை: பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் ஏழை குடும்பத்திற்கு ஜேசிபி வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார்.

இந்திய சினிமாவில் பெரும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி, இங்கிலிஷ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

பல படங்களில் மிரட்டல் வில்லன்

பல படங்களில் மிரட்டல் வில்லன்

தனித்துவமான நடிகரான பிரகாஷ் ராஜ், வில்லன் கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் கை தேர்ந்தவர். பல படங்களில் மிரட்டல் வில்லனாக அலற விட்டுள்ளார். அது மட்டுமின்றி ஹீரோவாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரத்திலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மத்திய அரசு குறித்து விமர்சனம்

மத்திய அரசு குறித்து விமர்சனம்

இதேபோல் 6 முறை நந்தி விருதுகளை பெற்றுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். மேலும் தமிழக அரசின் விருதுகள் பிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

கன்னட நடிகையுடன் திருமணம்

கன்னட நடிகையுடன் திருமணம்

நடிகர் பிரகாஷ் ராஜ் 1994ஆம் ஆண்டு கன்னட நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள் மற்றும் சித்து என்ற ஒரு மகனும் இருந்தனர். மகன் சித்து கடந்த 2004ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனை தொடர்ந்து லலிதா குமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம்

பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம்

பின்னர் 2010 ஆம் ஆண்டு நடன இயக்குநரான போனி வெர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் வேதந்த் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் தனது 11வது திருமண நாளை கொண்டாடிய பிரகாஷ் ராஜ், தனது இரண்டாவது மனைவியான போனி வெர்மாவை தனது மகன் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரகாஷ் ராஜ்

பாத்ரூமில் வழுக்கி விழுந்த பிரகாஷ் ராஜ்

தனது மகன் ஆசைப்பட்டதற்காக தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். அந்த போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. முன்னதாக பாத்ரூமில் வழுக்கி விழுந்தார் பிரகாஷ் ராஜ். இதனால் தோள் பட்டையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த போட்டோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைவர் பதவிக்கு போட்டி

தலைவர் பதவிக்கு போட்டி

தற்போது தெலுங்கு திரையுலகின் நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார். அதற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஜேசிபி பரிசளித்துள்ளார்.

பிரகாஷ் ராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்து

பிரகாஷ் ராஜுக்கு ரசிகர்கள் வாழ்த்து

பிரகாஷ் ராஜ் பவுண்டேஷன் சார்பாக ஒரு ஏழை குடும்பத்திற்கு இந்த உதவியை அவர் செய்துள்ளார். இந்த போட்டோக்களை நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X