twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா தானாக பரவவில்லை.. பரப்புகிறார்கள்.. கடுப்பான பிரபல நடிகர்.. குழந்தைகளை நினைத்து வேதனை!

    |

    சென்னை: கொரோனா தானாக பரவவில்லை பரப்புகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!

    உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படாததால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க தனிமைப்படுத்தல் மட்டுமே ஒரே வழி என உலக நாடுகள் தெரிவித்து வருகின்றனர்.

    15 வயசுல வீட்டை விட்டு எஸ்கேப்.. 2 வருஷம் போதைக்கு அடிமை... பிரபல நடிகையின் பகீர் பிளாஷ்பேக்!15 வயசுல வீட்டை விட்டு எஸ்கேப்.. 2 வருஷம் போதைக்கு அடிமை... பிரபல நடிகையின் பகீர் பிளாஷ்பேக்!

    எல்லைகள் மூடல்

    எல்லைகள் மூடல்

    பல நாடுகள் மற்ற நாட்டினர் தங்களின் நாட்டுக்குள் யாரும் உள்ளே நுழையாதப்படி எல்லைகளை மூடியுள்ளன. பல நாடுகள் தங்களின் விமான சேவையை நிறுத்தியுள்ளன. ஆனாலும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

    தீவிரத்தை உணராமல்

    தீவிரத்தை உணராமல்

    இந்தியாவிலும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் 144 தடை ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளன. இருப்பினும் மக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணராமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர்.

    வீட்டிற்குள் இருக்க வேண்டும்

    வீட்டிற்குள் இருக்க வேண்டும்

    காய் கறி கடை, இறைச்சி கடை, சாலைகள் என மக்கள் இன்னும் கூட்டம் கூட்டமாகதான் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். கொரோனாவின் சீரியஸ்னஸ் மக்களுக்கு புரியவில்லை என பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தானாக பரவவில்லை

    இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். என் மகனுடன் நேரத்தை கழிக்கிறேன். குழந்தைகள் எதிர்காலம் யோசிக்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Prakash Raj says Corona virus does not move, we the people move it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X