twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் குரல்… என் நிலம்... வேளாண் சட்டம் வாபஸ்… பிரகாஷ் ராஜ் கருத்து!

    |

    சென்னை : 3 வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்டது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    என்னை உற்சாகப்படுத்துவது அது ரெண்டும் தான்.. நடிகை அமலா பால் ஷேர் பண்ண சூப்பர் சீக்ரெட்!என்னை உற்சாகப்படுத்துவது அது ரெண்டும் தான்.. நடிகை அமலா பால் ஷேர் பண்ண சூப்பர் சீக்ரெட்!

    மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காமல் இருந்ததது.

    தொடர் போராட்டம

    தொடர் போராட்டம

    மத்திய அரசு வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால், விவசாயிகள், வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக கூறினார்கள்.

    மத்திய அரசு பிடிவாதம்

    மத்திய அரசு பிடிவாதம்

    மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக இருந்தது. இதனால் எதற்கும் சளைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் அவ்வப்போது நாடு தழுவிய அளவில் 'பந்த்'திலும் பங்கேற்றனர்.

    3 வேளாண் சட்டம் வாபஸ்

    3 வேளாண் சட்டம் வாபஸ்

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிரடியாக அறிவித்தார். விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் பிரதமர் மோடி கூறினார். வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அனைத்து விவசாயிகளும் இல்லம் திரும்புமாறு அறிவித்தார். பிரதமரின் இந்த முடிவை பலரும் வரவேற்று வருகின்றனர்.

    என் குரல்... என் நிலம்

    இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது, ட்விட்டர் பக்கத்தில். எனது தேசத்தைச் சேர்ந்த அயராது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர் என்ற தலைப்பில் ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், என் குரல்... என் நிலம் என்று ஒரு விவசாயி வெறும் மண்வெட்டி அல்ல... விவசாயி மண்ணாங்கட்டி அல்ல.. விவசாயி புழு அல்ல... அவர்கள் நாட்டின் முதுகெலும்புகள் என அந்த வீடியோ பதிவில் கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

    English summary
    Actor Prakash raj talks about, Three Farm laws will be repealed
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X