யூடியூபர் நள்ளிரவில் கைது.. கொஞ்சும் கூட வெட்கமில்லாத பழிவாங்கும் வேலை.. கொந்தளித்த பிரகாஷ் ராஜ்!
சென்னை: தமிழ் நாட்டில் கடந்த ஆட்சியில் யூடியூபர் சவுக்கு சங்கர் எப்படி கைது செய்யப்பட்டாரோ அதே போல ஆந்திராவிலும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண்ணை கடுமையாக விமர்சித்து அவதூறான பேசிய யூடியூபரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். இதை நடிகர் பிரகாஷ் ராஜ் வன்மையாக கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் ஏலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் யூடியூபர் பிரஸ்ன ராவண் ஆந்திராவிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண்ணை கடுமையாக விமர்சித்து அவதூறான பேசினார். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆந்திரா போலீசார், ஹைதராபாத்தில் நள்ளிரவில் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இந்த வழக்கில் கைது செய்ய முடியாது என நீதிமன்றம் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது. ஆனால், அவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே, மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதிலும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து ஜாமீன் வழங்கிய நிலையில், தற்போது மச்சிலிப்பட்டினம், குடிவாடா என ஆந்திராவின் பல்வேறு மாவட்ட போலீசாரும் அவர் மீது அடுத்தடுத்து புதுப்புது வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்: இதை வன்மையாக கண்டித்து இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹைதராபாத்தில் நள்ளிரவில் கைது செய்து பெரிய பில்டப் கொடுத்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கூட்டிட்டு போனாங்க. இந்த வழக்கில் கைது செய்ய முடியாது என்று கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடனே வேறொரு வழக்கு போட்டு மீண்டும் கைது செய்தீங்க, அப்போதும் நீதிமன்றம் இது சரியல்ல என்று கூறி அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது. மறுபடியும் இன்னொரு வழக்கில் கைது செய்வார்களா? இப்படி ஒரு 30 வழக்குகள் தயாராக இருக்கிறதாமே, ஜாமீன் கொடுத்தால் கைது செய்வதற்கு, நீதிமன்றம் மீண்டும் மீண்டும் நீங்கள் தவறு செய்கிறீர்கள், இப்படி கைது செய்ய முடியாது என்று கூறியும், நீங்கள் இன்னும் 30 வழக்குகள் போட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, இன்னும் எவ்வளவு தூரம் போவீங்க?
வெட்கமில்லையா?: என்ன இது? வெட்கமில்லாத பழிவாங்கும் நடவடிக்கை. இன்னும் என்ன செய்ய நினைக்கிறீங்க? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள், எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் அதிகாரத்தை இப்படி தவறாகப் பயன்படுத்த முடியாது. அவரை விரைவில் விடுதலை செய்வீர்க என்று நம்புகிறேன் என கடுமையாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications