twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனியும் கந்து வட்டியும், தற்கொலையும் தொடரக் கூடாது.. பிரகாஷ் ராஜ்

    இனியும் தமிழகத்தில் கந்து வட்டியையும் தற்கொலையையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    By Lakshmi Priya
    |

    Recommended Video

    இனியும் கந்து வட்டியும், தற்கொலையும் தொடரக் கூடாது.. பிரகாஷ் ராஜ்- வீடியோ

    கோவை: தமிழகத்தில் இனியும் கந்து வட்டியும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வதையும் தொடர விடக் கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், ப்ரொடெக்ஷன் கம்பெனி வைத்திருந்த இவர், மதுரையைச் சேர்ந்த அன்புச் செழியனிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு மேல் வட்டிக் கேட்டு அசோக்குமாரை அன்புச்செழியன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்பத்துக்கு பெண்களையும் பெரியவர்களையும் கேவலமாக பேசியதால் மனமுடைந்த அசோக் குமார் நேற்று அபிராமபுரம் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    நடிகர் பிரகாஷ் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழ் திரையுலகில் மாற்றம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத துறையாக சினிமா துறை உள்ளது.

    10 சதவீதம்

    10 சதவீதம்

    கடன் வாங்கித்தான் திரைப்படம் எடுக்கிறோம். பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தற்கொலையும் தொடரக் கூடாது

    தற்கொலையும் தொடரக் கூடாது

    இனியும் தமிழகத்தில் கந்து வட்டியும் தொடரக் கூடாது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் தொடர கூடாது. பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு யாரும் இல்லை என்ற மனநிலைக்கு வரக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசி தீர்வு காண வேண்டும்.

    அரசியலுக்கு வரலாம்

    அரசியலுக்கு வரலாம்

    ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரலாம். கமலுக்கு சினிமா இல்லாததாலும், ரஜினிக்கு சினிமா இருப்பதாலும்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஏற்க முடியாது. பத்மாவதி படத்தில் நடித்த தீபிகாவின் மூக்கை அறுப்பேன் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறுவது சரியா.

    பெரிய ஆளா?

    பெரிய ஆளா?

    ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கமல் அளித்தால் அவரை தமிழக ஆட்சியாளர்கள் சட்டரீதியாக சந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை மிரட்டுவதும் கருத்தே சொல்லக் கூடாது என்பதும் எந்த விதத்தில் நியாயம். கமலையே மிரட்டும் அளவுக்கு இவர்கள் பெரியவர்களா? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Actor Prakash Raj says that Cine industry needs more transformation. That Industry is acting without any protection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X