கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சினேகா, பிரசன்னா!

சென்னை : நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Actor prasanna and sneha gets vaccinated

கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பின்னர், கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் அலையின்போது தடுப்பூசிகள் இல்லாததால் தனிநபர் இடைவெளி மற்றும் முகக்கவசம் மூலமாக மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது..

Actor prasanna and sneha gets vaccinated

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரம் அடைந்ததால் மீண்டும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டாக தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்த நிலையில், 2-ம் அலையின் காரணமாக பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், பல்வேறு கிராமங்களின் சிறப்பு மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டியே வந்தனர். இந்நிலையில், மக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டனர். அதன் பின்னரே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள்.

Recommended Video

நீங்க Vaccine போட்டாச்சா ? | Actress Sona | Filmibeat Tamil

இந்நிலையில், நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் இன்று காலை தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் இன்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வலைத்தள பக்கங்களில் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X