அப்பாவின் கனவை.. ஒரு செங்கல் விடாம செதில்செதிலா ஒடச்சவன் நான்... பிரபல நடிகர்!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் , தந்தையர் தினம் , காதலர் தினம் என்று வந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஸ்பெஷல் தான் இருப்பினும் பிரபலங்கள் பதிவிடும் பொழுது இன்னமும் ஸ்பெஷல்
நடிகர் பிரசன்னா பல வெற்றி படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து வைத்து உள்ளார் . சினேகா பிரசன்னா காதல் திருமணம் , காதல் ஜோடி என்று இவர்கள் மீது ரசிகர்கள் அதிகம் அக்கறை காட்டுவதும் கமெண்ட்ஸ் செய்வதும் உண்டு
காமராஜர் மீது அதிகம் பற்று கொண்ட பிரசன்னா அவ்வப்போது பல சமூக கருத்துக்களையும் இணையத்தளத்தில் பதிவிடுவார் . அரசியல் ரீதியாகவும் சமூகம் சார்ந்த பல கருத்துக்களை தைரியமாக சொல்லுவது பிரசன்னாவிற்கு புதிதல்ல.

இணையத்தளம்
சமீபத்தில் வந்த தந்தையர் தினத்தை ஒட்டி பல சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது தந்தை பற்றி பல பதிவுகளை பெருமையாகவும் அருமையாகவும் சொல்லி வந்தனர். அதை அனைத்தையும் பார்த்த பிரசன்னா தன் எழுத்து ஆர்வத்தையும் தந்தை மீது கொண்ட பாசத்தையும் அவர் ஸ்டைலில் முக நூலில் பதிவிட்டார் .

என்புள்ள ஹீரோ
எல்லாரும் போட்ட தந்தையர் தின பதிவெல்லம் பார்த்தப்போ எனக்கும் எழுதணும்னு தோணுச்சு. சினிமா பாணில சொல்லனும்னா "7G ரெயின்போ காலனி"ல வர விஜயன் சார மாதிரி எங்கப்பா. "என்புள்ள ஹீரோ ஹோண்டால வேலை பாக்குறான்"ங்குற மாதிரி "அவனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்"நு எனக்காக உருகுற டைப்ஸ் .

கனவு கோட்டை
எனக்காக என்னப்பத்தி நிறைய கனவு கோட்டையெல்லாம் கட்டிவெச்சிருந்தாரு. ஒரு செங்கல் விடாம செதில்செதிலா ஒடச்சவன் நானு. அப்பவும் ஒடஞ்ச செங்கலயெல்லாம் அடுக்கி கோட்டை இப்பவும் கட்டிகிட்டே இருக்காரு. அவர் வேண்டிகிட்ட எந்த சாமியும் அவர் வேண்டுனமாதிரி என்ன ஆக்கல. ஆனாலும் எனக்காக எப்பவும் வேண்டிகிட்டே இருக்காரு .

ஐ லவ் ஹிம்
நிறைய பேர் போட்ட மாதிரி "BestDadInTheWorld "னெல்லாம் சொல்லல. நானு "ஆரண்ய காண்டம்" படத்துலவர சின்னபயமாரி. "ஏன்டா உங்கப்பாவ அவ்ளோ புடிக்குமா"னு கேட்டா "அப்டில்லாம் ஒண்ணுமில்ல. ஆனா அவுரு எங்கப்பா"நனு சொல்லற டைப்ஸ் . "i love u " லாம் நாங்க சொல்லிக்கறதில்ல. சொன்னாலும் ஒரு மாதிரி வித்யாசமா இருக்கும். ஆனா "ஐ லவ் ஹிம்"தான். "ஹீ லவ் மீ"தான். சமீபத்தில் போஸ்ட் போட்ட எவ்ளோ பய உண்மையா போட்டானு தெரியாது. நாஞ்சொல்றது உண்மை என்று நடிகர் பிரசன்னா தன் அப்பாவின் பாசம் கலந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பிரசன்னாவின் இந்த பதிவிற்கு பல ரத பட்ட கமெண்ட்ஸ் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் அப்பா மீது அக்கறை காட்டும் எல்லா மகன்களுக்கும் இந்த பதிவு மிகவும் பிடித்து , பலரும் ஷேர் செய்து வருகின்றனர் . பிரசன்னாவின் அப்பாவை போலே பல அப்பாக்கள் தன் மகனுக்காகவும் மகளுககாவும் பல கனவுகளை கட்டி கொண்டே தான் இருக்கின்றனர் .


Click it and Unblock the Notifications











