வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்.. பிரபல நடிகர் வருத்தம்.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக பிரபல நடிகர் வருத்தப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.
படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

வாய்ப்பு அளிக்கப்படவில்லை
அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசுவது யார் என்பது குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. ஐஸ்வர்யா ராய்க்கு சின்மயி டப்பிங் பேசுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லையாம். அவர் மீது சில புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு பதில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை ஸ்வர்ணமால்யா. இதேபோல் கவிஞர் வைரமுத்துவுக்குவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

வருத்தப்படும் பிரசன்னா
இதேபோல் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாதான் முதலில் பேசப்பட்டாராம். ஆனால் கால் ஷீட் பிரச்சனையால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பிரசன்னா, வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தான் இழந்துவிட்டதாகவும், மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தவறவிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மீண்டும் கூட்டணி
இதேபோல் நடிகர் தனுஷ் இயக்குநர் செல்வராகவன் படத்தில் நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தன்னுடைய 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தயாரிக்கிறார். மாரி 2 படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா மீண்டும் இந்த படத்தின் மூலம் தனுஷூடன் இணைகிறார். கடைசியாக 2011ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தார் தனுஷ். அதனை தொடர்ந்து தற்போதுதான் மீண்டும் செல்வராகவனுடன் இணைகிறார் தனுஷ்.

ஹீரோயின் யார்?
இதேபோல் நானே வருவேன் படத்தின் ஹீரோயினாக மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்துஜா, விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் நிற வெறி
பிரபல பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக், கறுப்பான பெண்கள் பாலிவுட்டில் ஓரம் கட்டப்படுவதாக குற்றம்சாட்டியதையும் கூறியுள்ளார் பிகே. நடிகர் நவாஸுதீன் சித்திக் பாலிவுட்டில் திறமைக்கு மதிப்பு இல்லை என்றும் தோற்றத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றும் கூறியதையும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











