வலிமையில் வாய்ப்பில்லைன்னா என்ன? அண்ணன் கிட்ட சொல்லி மங்காத்தா 2வில் வாய்ப்பு வாங்கித் தரேன்!

சென்னை: வலிமையில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் நடிகர் பிரசன்னா போட்ட பதிவுக்கு ஆறுதலாக மங்காத்தா 2வில் பார்த்துக்கலாம் என்ற சிக்னலை பிரேம்ஜி கொடுத்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.

இந்த படத்தில் முக்கியமான ரோலுக்கு முயற்சி செய்த நடிகர் பிரசன்னாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நடிகர் பிரேம்ஜி அட்டகாசமான ரிப்ளை போட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

நடிகர் பிரசன்னா தனது சிறப்பான நடிப்பை பல படங்களில் நிரூபித்துள்ளார். ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னாவிற்கு அது பெரிய அளவில் கை கொடுக்காததால், அஞ்சாதே, திருட்டு பயலே 2, மாஃபியா என தற்போது வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். தான் நடிக்கும் படங்களில் சிறந்த நடிப்பை கொடுத்து அசத்துவது இவரது வழக்கம்.

வலிமை வாய்ப்பு

வலிமை வாய்ப்பு

தல அஜித்தின் வலிமை படத்தில் பிரசன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதனைத் தொடர்ந்து ரசிகர் ஒருவர் நேரடியாக ட்வீட் போட்டு பிரசன்னாவிடம் வலிமை படத்தில் நடிக்கிறீங்களா பிரதர் என கேட்க, இன்னும் கன்ஃபார்ம் ஆகலை பிரதர் என ரிப்ளை செய்தார் பிரசன்னா.

வலிமை வில்லன்

வலிமை வில்லன்

பிரசன்னா போட்ட இந்த ட்வீட்டால் தல அஜித்தின் வலிமை படத்தில் விரைவில் பிரசன்னா இணையவுள்ளார் என்றும், அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்றும் பல வதந்திகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஆனால், பிரசன்னா எதிர்பார்த்த வலிமை வாய்ப்பு கடைசியில் அவருக்கு கிடைக்கவில்லை.

அப்செட் பதிவு

அப்செட் பதிவு

இதனால் அப்செட்டான நடிகர் பிரசன்னா, தல அஜித்தின் வலிமை படத்தில் நான் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு கருத்துக்களை பதிவிட்ட ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. ஆனால், வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் அடைந்த மனவேதனைக்கு ஆறுதலாக உங்கள் பிரார்த்தனை இருந்தது. நிச்சயம் அடுத்த முறை தல படத்தில் அவருக்கு வில்லனாக நடிப்பேன் என உருக்கமான ஒரு அப்செட் பதிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

மங்காத்தா 2

மங்காத்தா 2

தல அஜித்தின் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன நண்பா, மங்காத்தா 2வில் நிச்சயம் நடிக்கிறீங்க என்ற சிக்னலை இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி, நடிகர் பிரசன்னாவின் அப்செட் பதிவுக்கு கீழே சீட்டுக்கட்டு சிம்பிளை போட்டு கமெண்ட் செய்திருந்தார்.

புரியாதவர் போல

புரியாதவர் போல

பிரேம்ஜியின் இந்த கமெண்ட்டை பார்த்த நடிகர் பிரசன்னா, ஒன்றும் புரியாதவர் போல என்ன ரம்மி ஆட கூப்பிடுறியா என கமெண்ட் செய்து, அவர் வாயிலிருந்தே அந்த உத்தரவான விஷயம் வெளியே வரவேண்டும் என ரிப்ளை செய்தார். நிஜமாவே நீங்க சூப்பர் நடிகர் தான் பாஸ் என பிரசன்னாவின் ரசிகர்களும் அதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

மங்காத்தா க்ளிப்

மங்காத்தா க்ளிப்

அதற்கு பதிலாக, அவருக்கு புரியும் விதமாக பிரேம்ஜி, மங்காத்தா படத்தில் அஜித் என்ட்ரி ஆகும் காட்சியை பதிவிட்டு, இப்போ நம்ம என்ட்ரி என மங்காத்தா 2வில் நிச்சயம் நீங்க இருக்கீங்க என்பதை கன்ஃபார்ம் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த சேட்டிங்கை பார்த்த தல ரசிகர்கள், மாநாடு முடித்த கையோடு மங்காத்தா 2 ஆட்டத்துக்கு வெங்கட் பிரபு தயாராகி விட்டார் என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X