Ajithkumar: விஜய் படத்தில் மனைவி.. அஜித் படத்தில் கணவர்.. குட் பேட் அக்லி மெயின் வில்லனே இவரா?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கி உள்ளது. இந்தப் பாடலையும் படமாக்கிவிட்டால் படத்தின் ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிவிடும் எண்ணத்தில் லைகா உள்ளது. மேலும் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார். இப்படியான நிலையில், படத்தில் பிரசன்னா இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலேயே தனக்கென தனி சினிமா பாணியைக் கொண்டுள்ள நடிகர் என்றால் அது அஜித்குமார்தான். அவர் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என போஸ்டரைப் பார்த்ததும் தெரிந்துவிட்டது. மேலும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. இதுமட்டும் இல்லாமல் ஜப்பானிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு வருகின்றது.

மேலும் அஜித் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெறவுள்ள கார் ரேஸில் கலந்து கொள்ளவும் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். இது தொடர்பான அறிவிப்புகள், புகைப்படங்கள், வீடியோக்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார். இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் குட் பேட் அக்லி படத்தின் பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் படத்தில் அஜித் நெகடிவ் கதாபாத்திரம் எனத் தெரிந்துவிட்டது. அப்படியானால் அஜித்திற்கு வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு இருந்தது.

பிரசன்னா: இந்நிலைடில் நடிகர் பிரசன்னா தனது எக்ஸ் பக்கத்தில், அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் தான் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அதில், " அனது அன்பிற்குரிய நண்பர்களே, நலம் விரும்பிகளே, இந்த முறை நமது அன்புக்குரிய தல அஜித்குமார் சாரின் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது உண்மைதான். அஜித் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய பலநாள் கனவு. மங்காத்தா படத்தில் இருந்து ஒவ்வொரு முறை அஜித் சாரின் படங்கள் அறிவிக்கப்படும்போதும், அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டதுண்டு. இதனால் அஜித் சாரின் ரசிகர்கள் பலமுறை அவரது படத்தில் நான் இருக்கின்றேன் என நினைத்து வாழ்த்தியுள்ளார்கள்.

குட் பேட் அக்லி: ஆனால் ரசிகர்கர்கள் சொல்வது போல் எப்போதும் நடந்ததில்லை. ஆனால் இறுதியாக, அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதனை உங்களிடம் தெரிவிக்க இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. நான் குட் பேட் அக்லியின் ஒரு பகுதியாக இருக்கிறேன். அஜித் சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவிஸ், கடைசியாக தலவுடன் என்னைப் பார்க்க விரும்பிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். என்னால் இப்போது என்னால் படம் குறித்து அதிகம் கூறமுடியாது, அதற்காக என்னை மன்னிக்கவும்.

நியூ லுக்: எனது போர்ஷன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதேநேரத்தில் என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும், அஜித் சார் இப்படியான நபராக இருப்பதால்தான் அவர் மிகவும் நேசிக்கப்படுகிறார். மேலும் அவரைப் பற்றி உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதான் அஜித்சார். பணிவு நிரம்பிய மனிதன், மிகவும் எளிமையான மனிதராகவும் உள்ளார். நன்றி, உங்கள் அனைவருக்கும் அன்புகள்" என பதிவிட்டு தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் ஹேர் ஸ்டைலில் டெயில் விட்டுக் கொண்டு மிகவும் அட்டகாசமான லுக்கில் உள்ளார் பிரசன்னா. மேலும் இந்தப் படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











