வாக்காளர்கள் முட்டாள்களா.. என்ன சொல்ல வருகிறார் நடிகர் பிரசன்னா
வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : வாக்காளர்கள் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று நடிகர் பிரசன்னா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்பை முன்னிலைப்படுத்தி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிபிஐ போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடே பெரிதும் எதிர்பார்த்த இந்த தீர்ப்பு இப்படி நமத்து போன பட்டாசு மாதிரி ஆகிவிட்ட நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்துகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறுகையில் தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











