அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் மிரட்டும் வில்லன் அர்ஜுன் தாஸ்.. அட இந்த நடிகரும் இருக்காரா?
சென்னை: நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அவர் பிஸியாகி உள்ளார்.
இன்றைய தினம் ஸ்பெயினில் துவங்கியுள்ள குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில், நடிகர் அஜித் மற்றும் திரிஷா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மிரட்டல் வில்லனாக அர்ஜுன் தாஸ் இணைந்துள்ள நிலையில் புதிய வரவாக நடிகர் பிரசன்னாவும் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்த நிலையில் இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த படத்தின் ரிலீஸ் வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாகவோ வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இது குறித்து லைகா நிறுவனம் அறிவிப்பு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
குட் பேட் அக்லி படம்: இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் தற்போது நடிகர் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஸ்பெயின் சென்றுள்ளனர். இன்றைய தினம் துவங்கியுள்ள இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் மற்றும் திரிஷா இருவரும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக மிரட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் புதிய இணைப்பாக நடிகர் பிரசன்னாவும் இந்த படத்தில் தற்போது கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் பிரசன்னா: நடிகர் பிரசன்னா ஹீரோவாகவும் பல படங்களில் லீட் கேரக்டர்களிலும் நடித்துவரும் நிலையில் அவருக்கு குட் பேட் அக்லி படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர் அமைந்திருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக இந்த படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதத்தால் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் படத்தின் ஷூட்டிங்கை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: சரியான திட்டமிடலுடன் ஷூட்டிங்கை ஆதிக் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் வெயிட்டிங். இரண்டு ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித்தின் அடுத்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தை மிகப்பெரிய ஹிட்டாக ரசிகர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தடம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











