Ajithkumar: குட் பேட் அக்லி சூட்டிங் வீடியோ.. அதிரடி காட்டும் நடிகர்.. அஜித்தை காணோமே!
சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவு செய்யப்பட்டு படம் வரும் ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே முன்னதாக பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட குட் பேட் அக்லி படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் பட குழுவினர் வெளியிட்டனர். படத்தில் பிரசன்னா, பிரபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். தற்போது படத்தின் சூட்டிங் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு தற்போது ஸ்பெயினில் தொடர்ந்து சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கில் அஜித், பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகின்றனர். படத்தில் திரிஷாவும் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் பிரசன்னா வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகிறார். முன்னதாக அவரது கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சூட்டிங் ஸ்பாட் வீடியோ: அதில் அவர் குடுமியுடன் வித்தியாசமான கெட்டப்பில் காணப்படும் நிலையில் அவர் மானிட்டரில் படத்தின் ரஷ்ஷை பார்ப்பதாக இந்த வீடியோ அமைந்துள்ளது. இதனிடையே பின்னால் உட்கார்ந்து கொண்டு நடிகர் பிரபுவும் அசிஸ்டன்ட்களுடன் பேசுவதாகவும் இந்த வீடியோ காணப்படுகிறது. இந்நிலையில் இந்த வீடியோவுடன் மகிழ்ச்சியையும் பிரசன்னா பகிர்ந்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் தற்போது தொடர்ந்து விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஜப்பானில் முன்னதாக திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது.
ஸ்பெயினில் விறுவிறு சூட்டிங்: இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் ஏறக்குறைய நிறைவு செய்துவிட்டே படக்குழுவினர் சென்னை வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அஜித்துடன் அவரது குடும்பத்தினரும் ஸ்பெயினில் தங்களது சுற்றுலாவை சில தினங்கள் மேற்கொண்டனர். அதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் புகைப்படங்களை ஷாலினி அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங், டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரிக்குள் ஒட்டுமொத்தமாக நிறைவடையும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
தள்ளிப்போகும் ரிலீஸ்?: முன்னதாக குட் பேட் அக்லி படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த நாளில் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதால், இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீசாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடிலும் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவத்தை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications